🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட கம்பளத்தார்! மாவட்டம் முழுதும் பதற்றம்.

மதுரை சிறையில் DNT கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் DNT போராளிகளுக்கு ஆதரவாக நாமக்கல்  காந்நதியவாதி திரு. ரமேஷ் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.


DNT-கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் மதுரை திரு. பாண்டியன் மற்றும் திரு.நேதாஜி கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

DNT-கோரிக்கைகள் தொடர்பான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள், அதேகோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொன்விழா நகர் மக்கள் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் திரு.பழனிசாமி தலைமையிலும்,பரமத்தி வேலூர் சாலப்பாளையம்நகர் மக்கள், நாமக்கல், திருசின்னுசாமி மற்றும் திரு.தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையிலும், வடக்கு தொட்டிபாளையம் கிராமத்தில் செல்வி.கௌசல்யாதேவி தலைமையிலும், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மண்கரட்டு பாளையம் கிராமத்தில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜ் மற்றும் தொட்டிய நாயக்கர் சமூக அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்தநாள் விழாவில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுரை சிறையில் DNT கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி திருமதி.தவமணி அம்மாள் மற்றும் தேனி அன்பழகன் தலைமையில்உண்ணாவிரதம் இருந்துவரும் போராளிகளுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.


நாமக்கல் ஒன்றியம் திண்டமங்கலம்  கிராமம் அப்பிநாயக்கன் பாளையம் ஊர் பொதுமக்கள் திரு.சுப்பிரமணி தலைமையில் மதுரை சிறை போராளிகளுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வீரமுழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


க.பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் நாமக்கல் கோவிந்தராஜ் தலைமையில் மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேகோரிக்கைக்காக நாமக்கல் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி கிராம மக்கள் திரு.ரவிச்சந்திரன்  தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தொட்டிய நாயக்கர் சமுதாயம் மக்கள் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து DNT-கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி, தமிழக அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved