🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வலசையில் மீளும் பாஞ்சையின் சரிதம்!

சின்ன பாஞ்சாலங்குறிச்சியாக மாறிய வலசை கிராமம்!

ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, ஆளும் அரசியல் தலைவர்களை அழைத்து வந்து கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய வலசை ஊர் கிராம மக்களின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது. 


அரசியல் விழிப்புணர்வு பெற்ற கம்பளத்தார் கிராமாக வலசை மாறியது நமது சமுதாயத்திற்கு மிகப் பெரும் பெருமையாகும். இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம், இது மாதிரியான அரசியலோடு கலந்த விழாக்கள் தான் நமது இனத்தை சமவெளிக்கு எடுத்துச் செல்லும். 

வலசை கிராமத்து பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு, பொதுவாக கட்டபொம்மன் விழாக்களில் இளைஞர்கள் திரட்சியாக கலந்து கொண்டு விசில் அடிப்பதும், ஆராவரம் செய்வதும், சிலம்பு , சுருள் வாள், போன்ற வீரவிளையாட்டுக்களை விளையாடி தங்கள் வீரத்தின் முறுக்கை வெளிப்படுத்துவதுமே கம்பளத்தாரின் குணங்களாக நாம் பார்த்து வந்திருக்கிறோம் , ஆனால் வலசை கிராமம் சற்று வித்தியாசமாக ஆண்களும் பெண்களும் குடும்பமாக வந்து விழாவை முன்னிறுத்தியது அரசியல் நகர்வுக்கு கட்டியம் கூறும் விழாவாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.


நிகழ்ச்சி நடத்துவதற்கும் பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது, அந்த வகையில் சின்னஞ் சிறிய கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஓரளவு பிரம்மாண்டம் தான், வரலாற்று சிறப்பு வாய்ந்த பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் கோவில் திருவிழா சிறப்பாக நடப்பது போல் வலசையில் கட்டபொம்மன் விழா சிறப்பாக நடைபெற்று இருக்கிறது அந்த வகையில் வலசையை நாம் "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றே அழைக்கலாம்.

ஒட்டநத்தம் கிராமத்தை கம்பளத்தார் இனமக்கள் செருக்குடன் ஆண்டு வந்ததையும், அங்கு வரலாற்றின் காலம்தொட்டு நடைபெற்ற வீரமான யுத்த சம்பவங்களால் அந்தக் கிராமம் "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஜனநாயக நாட்டில் மக்களாட்சி மலர்ந்த பிறகு எண்ணிக்கையும், அறிவும், ஆளுமையே, சிறந்த வீரமாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் மக்களாட்சியின் மாண்புமிகுக்கள் வலசை கிராமம் வந்ததும், அங்குள்ள பெண்கள் மேடையேறி, பெண் அமைச்சருக்கு சால்வைகள் அணிவித்து தங்கள் பேரன்பை வெளிப்படுத்திய இந்த அரசியல் நயம்தான் நமது இனத்தின் இன்றைய தேவையாய் இருக்கிறது.


வலசை கிராமம் போல் நமது இனத்தவர்கள் ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் இதுபோன்ற கட்டபொம்மன் பிறந்தநாள்  விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும், அரசியல் கலப்படத்தோடு செய்ய வேண்டும். மற்ற ஜாதியினரும், அரசியல்வாதிகளும் நமது இனத்தின் ஒற்றுமையையும், செயல்பாட்டையும் பார்த்து வியக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஊர் பெரியவர்கள், மற்றும் தொழிலதிபர் வலசை திரு. கண்ணன், காவல்துறை அதிகாரி திரு.சண்முகராஜ், திரு.செண்பக பெருமாள்,  த.வீ.க.ப.க.தலைவர் திரு.சங்கரவேலு ஐயா, முன்னாள் ச.ம.உ.திரு.வரதராஜன், புதிய ஆலயக்கமிட்டி ஒருங்கிணைப்பாளர் திரு.மாரிச்சாமி, செய்தியாளர்கள் திரு.வள்ளிராஜ், சிவா நாயக், சங்கர், ஜெயராமன் உள்ளிட்ட பலருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

வாழ்க வலசை கிராம மக்கள், வளர்க கட்டபொம்மன் புகழ்.

பெ.செந்தில்குமார்

பாஞ்சை போர்முழக்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved