🔴 LIVE | முப்பெரும் விழா 2023


"மதுரை ஜாம்" முற்றுகைப்போராட்டத்தில் அணிதிரண்ட கம்பளத்தார்.

68- சமுதாயங்களை உள்ளடக்கிய DNT-பிரிவினருக்கு, ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரியும், மத்திய அரசு DNT-பிரிவு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தஅனைத்து உதவிகளையும் செய்யமுன்வந்தபொழுதும், அதற்குரிய அதிகாரியை மாநில அரசு நியமிக்காத்தைக்கண்டித்தும், நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் சீர்மரபின பழங்குடியினருக்கு (DNT) வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை பலவருடங்களாக வலியுறுத்தி,பலகட்டப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இதன்தொடர்ச்சியாக நேற்று (10.01.21) மதுரையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று சீர்மரபின பழங்குடியினர் நலச்சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தினர்.


DNT மக்களின் மதுரை ஜாம் முற்றுகைப் போராட்டத்தில், தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் பங்களிப்பு மாற்று சமுதாய உறவுகளை பொறாமைகொள்ளச்செய்யும் அளவில் இருந்ததாக சீர்மரபின நலசங்கத்தின் முன்னனி நிர்வாகிகள் வெளிப்படையாக பாராட்டினர். நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.பழனிச்சாமி தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் தனி பேருந்தின் மூலம் வருகை தந்திருந்தனர். அதேபோல் திரு.S.ஜக்குசாமி அவர்களின் தலைமையில் தேனிமாவட்டம், ஆணைமலையாம்பட்டியிலிருந்து 30 பேரும், விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் கிராமத்திலிருந்து திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையில் 20 பேரும், தேனிமாவட்டம், பெரியகுளம் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் 10 பேரும், அருப்புக்கோட்டை திரு.சந்திரசேகர் தலைமையில் 20 பேரும், கப்பலூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கண்ணன் அவர்களின் தலைமையில் 40பேரும், உச்சபட்டி திரு.ஈஸ்வரன் தலைமையில் 40பேரும் கலந்துகொண்டனர்.

தொட்டிய நாயக்கர் மஹாஜன சங்கத்தின் தலைவர் திரு.மாரையா அவர்களின் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டகளத்தில் திரு.மாரையா அவர்கள் போஸ் டிவிக்கு அளித்த பேட்டி

தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து போராட்டகளத்திற்கு அழைத்துச்செல்லும் பொறுப்பை சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜூ, ஒருநிணைப்பளார் திரு.சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். போராட்டகளத்தில் கலந்துகொண்ட சமுதாய மக்களுக்கு DNT குறித்த விழிப்புணர்வை சென்னை இராஜகம்பளத்தார் OBC-DNT உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.இராஜா அவர்கள் விளக்கிப்பேசினார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved