🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு - அதிர்ந்தது அரசியல் களம்!!!

28.02.20201 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணி அளவில் ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஸ்ரீவாரி மஹால் பின்புறமுள்ள மணி சேம்பரில், தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

விடுதலைக்களத்தின் நிறுவனத்தலைவர் இனமான போராளி கொ நாகராஜன் அவர்கள் தலைமையில் விடுதலைக்களத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.R.நாகேஸ்வரன் அவர்களின் வரவேற்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் திரு.ரமேஷ், ஈரோடு மாவட்ட பொருளாளர்.திரு.பாலசுப்பிரமணியம், தலைமை நிலைய செயலாளர்.திரு.செந்தில்குமார் மற்றும் விடுதலைக்களத்தின் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பா.ராமமோகன் ராவ் IAS (Rtd)  அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும், இம்மாநாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தை சார்ந்தவர்களும், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் சமுதாய நல சங்கத்தை சார்ந்தவர்கள், நாமக்கல், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையை சார்ந்தவர்களும், மற்றுமுள்ள சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் விடுதலைக்களத்தின் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், மகளிர் அணியை சார்ந்தவர்களும், இளைஞர் அணியைச் சார்ந்தவர்களும், தொண்டரணியைச் சார்ந்தவர்களும், தொழில்நுட்ப பிரிவு அணியைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும், பெண்கள் என குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


விடுதலைக்களத்தின் சார்பில் இதுவரையில் நடைபெற்ற பல்வேறு மாநில மாநாடுகளில் இம்மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் இதுவரையிலும் எந்த ஒரு அமைப்பும் செய்திராத வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் எழுச்சியோடும், கலை நிகழ்ச்சிகளோடு மாநாடு நடைபெற்றது.

சண்டை மேளம் முழங்க, இன்னிசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோடும், நடன நிகழ்ச்சியோடும் துவங்கிய இம்மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் தங்களுடைய சிறப்புரையில் அறிய பல கருத்துக்களை தெள்ளத் தெளிவாகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்து மாநாட்டை மேலும் சிறப்படையச் செய்தனர்.

மேலும் இம்மாநாட்டில் தமிழ் மண்ணின் விடுதலைக்காகவும், இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், பாடுபட்டு அளப்பரிய பல தியாகங்களை செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரை, சிவாஜி கணேசன், திருமலை நாயக்கர், விருப்பாச்சி கோபால நாயக்கர், மா.பொ.சி, சங்கைய நாயக்கர், வைய்யப்ப நாயக்கர் போன்ற பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் விடுதலைக் கழகத்தின் கொள்கை உறுதிமொழி ஏற்பு நிகழ்வுடன்

1.தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

2. விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு தலைநகர் சென்னையில் முழு உருவ வெண்கலச் சிலை விரைந்து அமைத்திட வேண்டும்.

3. தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் விரைந்து அமைத்திட வேண்டும். 

4. இந்தியாவில் பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் தனியார் பெரு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

 5. தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர் பழங்குடியினர் சமுதாயத்திற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும். 

6. உயர்குடி மக்களுக்கு மட்டுமே கை கொடுக்கும் வகையில் இருக்கும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

என்பன போன்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

சீரோடும் சிறப்போடும் மிக மிக பிரமாண்டமான முறையில் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அல்லும், பகலும் அரும்பாடுபட்ட விடுதலைக்களத்தின் அந்தியூர் ஒன்றிய தலைவர் திரு.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் திரு.நடராஜன், ஒன்றிய பொருளாளர் திரு.விஜயன் அவர்களுக்கும், அந்தியூர் ஒன்றிய விடுதலைக்களத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும், மாநாடு சிறப்புடன் நடைபெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களை ஏற்பாடு செய்து பல்வேறு சிரமத்திற்கு இடையிலும் மாநாட்டிற்கு வந்து சிறப்பு சேர்த்த விடுதலைக்களத்தின் அனைத்து மாநில மண்டல மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும், மகளிருக்கும், தோழமை சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், பல்வேறு முக்கிய பணிகளுக்கும் மத்தியிலு நம்முடைய அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வராது வந்த மாமணி டாக்டர் RMR பாசறையின் நிறுவனர் ஐயா  திரு.பா.ராமமோகன்ராவ் (தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்) அவர்களுக்கும், சிறப்புரை நிகழ்த்திய அனைத்து தலைவர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இங்ஙனம்,

விடுதலைக்களம்,

தலைமையகம்.

நாள்:02/03/2021.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved