🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள்இடஒதுக்கீட்டில் தொட்டிய நாயக்கர்களுக்கு வஞ்சகம்- கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு சமீபத்தில் தன் ஆயுட்காலத்தின் இறுதிநாளன்று MBC பிரிவில் ஒரு சாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கியது. அதே MBC பிரிவிலுள்ள தொட்டிய நாயக்கர்கள், முத்தரையர், பிரன்மலைகள்ளர், மறவர், வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட 68 DNT சமூகங்களும் தங்களுக்கு ஒற்றைச்சான்றிதழ் வழங்கவேண்டும் என்றும், மத்திய அரசின் உத்தரவை ஏற்று DNT மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் போராடி வந்தனர். இதுகுறித்து தமிழக முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பலமுறை முறையிட்டு வந்தனர். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் DNT ஒற்றைச்சன்றிதழ் வழங்கப்படும் என்று உத்தரவாதமளித்தார். ஆனால் தனது வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக முதல்வர்,DNT மக்களுக்கு கூடுதலாக கேடுவிளைவிக்கும் வகையில் MBC பட்டியலிலுள்ள 115 சமுதாயங்களை கலந்தாலோசிக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு சாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்.


இந்த உள்ஒதுக்கீட்டால் தொட்டியநாயக்கர் சமூகம் குறிப்பாக மதுரை, தேனி,திண்டுக்கல் மாவட்ட கம்பளத்தாருக்கு வெறும் 2.5% இடஒதுக்கீடு பிரிவில் 40-க்கும் அதிகமான சமூகங்களோடு போட்டிபோடும் நிலை ஏற்பட்டிருப்பதால், இப்பகுதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக அரசின் இந்த செயலைக்கண்டித்து தென்மாவட்டங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று நாமக்கல்லில் தொட்டியநாயக்கர் சமுதாயம் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சங்கத்தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கெதிராக முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved