🔴 LIVE | முப்பெரும் விழா 2023


300 ஆண்டுகால வழிபாட்டு உரிமையை தக்கவைக்குமா நாயக்கர் சமுதாயம்? - விடுதலைக்களம் கட்சி!

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரிய புலியூர் கிராமத்திலுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான மாலா கோவில் வழிபாட்டு உரிமையை பறிக்கும் ஈரோடு மாவட்டம் நிர்வாகத்தை கண்டித்து விடுதலைக்களம் கட்சியின் சார்பில் இன்று (12.07.2021) காலை 10.00 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் அருகிலுள்ள நீலகிரீஸ் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமை வகித்தார். இதில் பத்து ரூபாய் இயக்க மாநில பொதுச் செயலாளர் திரு.நல்வினை விஸ்வராஜு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சாதாரணமாக மரத்தடியில் ஒரு கல்லை நட்டுவைத்து வழிபடும் கோவிலையே அகற்றமுடியாமல் நாட்டின் பலபக்கங்களில் பிரச்சினைகள் இருக்கும்நிலையில், 300 ஆண்டுகாலமாக ஒருசமுதாயம் வழிபட்டுவரும் இடத்தை, வருவாய் நிர்வாக ஆவணங்களில் மாலா கோவிலுக்கு சொந்தமான இடமாக குறிக்கப்பட்டிருக்குமிடத்தை, போகிற போக்கில், ஒரு சமுதாயத்தை சிறுதுறும்பாக எண்ணி மாவட்ட நிர்வாகம் இடத்தை ஆக்கிரமிக்க முயல்வது கடுமையான கண்டனத்திற்குறியது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து கம்பளத்தாரின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved