🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா! தலைவர்கள் வாழ்த்து!

திருப்பூர் மாவட்டம், கூளிபாளையம் கிராமத்தை பூர்வீமாகக் கொண்டவரும், திருப்பூர் கணக்கம்பாளையம் தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி செயலாளராக பணியாற்றி உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரால் ஏகமனதாக பாராட்டப்பெற்று, கடந்த மாதம் பணிநிறைவு பெற்றவருமான திரு.S.இராஜகோபால் - திருமதி.R.ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்புமகனும், இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் செல்வன் SR.கோகுலகிருஷ்ணன் B.E., LL.B., க்கும், திருப்பூர் சுபேகா டெகஸ், ஹரியாஸ் எக்ஸ்போர்ட், மைதிலி பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களில் உரிமையாளரும், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திரு R.திருமூர்த்தி - T.ஜெயந்தி தம்பதியினரின் அன்புமகள் மருத்துவர் T.மைதிலி M.B.B.S., ஆகியோரது திருமண வரவேற்புவிழா நாளை மறுநாள் (06.06.2023) செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி-கவுண்டம்பாளையம் V.S.G. திருமண மஹாலில் நடைபெறுவதையொட்டி மணமக்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், இனிய நண்பருமான திரு.திருமூர்த்தி இல்லத்தில் நடைபெறவுள்ள சுபநிகழ்ச்சி அறிந்து அகமகிழ்வதாகவும், சமுதாயத்தின் மீது என்றென்ன்றும் பற்றையும், பாசத்தையும் வெளிப்படுத்தி வரும் திரு.இராஜகோபால் அவர்களின் அன்புமகனும், வழக்கறிஞருமான கோகுலகிருஷ்ணன், தந்தையாரின் அதே பாசத்தையும், பரிவையும் சமுதாயத்தின் மீது காட்டி வருபவர், வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு பிரச்சினைகளை அணுகுபவர் என்பதை வன்னியர் 10.5 இடஒதுக்கீடு வழக்கின்போது உணர்ந்துகொள்ள முடிந்தது. 75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து ஒருவர் முழுநேர உச்சநீதிமன்ற வழக்கறிராக பணியாற்றி வரும் பெருமைபெற்ற கோகுலகிருஷ்ணன், இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்து தொடங்கும் வாழ்வின் அடுத்த புதிய பயணத்தில், பல பெருமைகளைப்பெற்று பெற்றோர்களுக்கும், பிறந்த சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க இந்த இனிய தருணத்தில் மணமக்களை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved