OPS, TTV தலைமையில் நாட்டாமை இல்ல திருமண விழா - மணமக்களுக்கு வாழ்த்துகள்!

நாட்டாமை இல்ல திருமண விழா - மணமக்களுக்கு வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சிந்துவம்பட்டி நாட்டாமை இல்ல திருமணவிழா அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நாளை (28.05.2024) நடைபெறவுள்ளது. இதன் விவரம் வருமாறு,
சிந்துவம்பட்டி நாட்டாமை தெய்வத்திரு N.P.பெருமாள் நாயக்கர் அவர்களின் மூத்த மகனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், ஆண்டிபட்டி மாலைகோவில் சங்க துணைத்தலைவருமான திரு.கோபால் M.A.B.Ed., - திருமதி G.ஜெயந்தி தம்பதியரின் அன்பு மகன் செல்வன் P.G.தளபதி கௌதம் B.E., சிந்துவம்பட்டி நிலக்கிழார் K.V.சின்னப்பாண்டியன் - திருமதி.C.சுதா தம்பதியரின் அன்புமகள் செல்வி V.C.புவனேஸ்வரி B.Voc ஆகியோரின் திருமண விழா நாளை (26.05.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் பெரியகுளம் லெட்சுமிபுரம் VLK கிருஷ்ணசாமி- ருக்மணியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையேற்று நடத்திவைக்கும் இத்திருமண விழாவிற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கின்றார்.
மேலும், நாட்டாமை இல்ல திருமண விழாவில் அமமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக, மாவட்டக்கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
இதுதவிர, தேவாரம் ஜமீன்தார் K.S.T.நவநீதகிருஷ்ணன், வடவீரநாயக்கன்பட்டி அரண்மனையார் R.விஜயபாண்டியன், கண்டமனூர் ஊர் பெரியதனம் R.கமையாசாமி, பண்பாட்டுக்கழக மாவட்டச் செயலாளர் K.சக்திவேல், மாலைகோவில் சங்கத்தலைவர் நாகராஜன், தேவதானப்பட்டி ஜமீன்தார் N.S.T. தனராஜ் பாண்டியன் உள்ளிட்ட சமுதாய தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
திருமண விழாவிற்கு வருகைதரும் தலைவர்களை அமமுக தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் M.முத்துசாமி உள்ளிட்ட நாட்டாமை குடும்பத்தினரும், மணமகள் வீட்டாரும் வரவேற்கின்றனர்.