என்.ஸ்ரீதர் - எம்.நேசிகா திருமண வரவேற்பு விழா - மணமக்களு்க்கு வாழ்த்துகள்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.நாகராஜ் இல்லத் திருமணவிழா வரவேற்புவிழா இன்று மாலை (செவ்வாய்கிழமை - 11.06.2024) ராசிபுரத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மணமக்களுக்கு பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.R. நாகராஜ் - திருமதி.N.வனிதா ஆகியோரது அன்புமகன் N.ஸ்ரீதர் B.E., நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மதி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் திரு.P.N.மதியழகன்- திருமதி.M.சிவகாமி ஆகியோரின் அன்புமகள் M. நேசிகா B.Sc., M.Com., ஆகியோரது திருமண வரவேற்புவிழா இன்று செவ்வாய்கிழமை (11.06.2024) மாலை 6 மணி முதல் இரவு 10 வரை இராசிபுரம் சேந்தமங்கலம் சாலையிலுள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இத்திருமணவிழாவில் பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
திரு.நாகராஜ் இல்லத் திருமண விழாவையொட்டி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் பி.இராமராஜ் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.