எஸ்.ஆர்.இராஜேந்திரன் இல்லத்திருமணவிழா - மணமக்களுக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஆண்டு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்கு பெரும் ஊன்றுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்து விழா வெற்றிகரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான கொல்லபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான தெய்வத்திரு.எஸ்.ஆர்.இராஜேந்திரன் அவர்களின் இல்லத்திருமணவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன் விவரம் பின்வருமாறு,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொல்லபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தெய்வத்திரு எஸ்.ஆர்.இராஜேந்திரன் அவர்களின் சகோதரர் திரு.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - திருமதி.முத்துராமம்மாள் ஆகியோரின் அன்புமகள் ஆர்.நந்தினி M.A., PGDCA - திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், காவலப்பட்டி கிராமம், பெரியகலையம்புத்தூர் மிராஸ்தார் திரு.T.பார்த்தீபன் M.A., - திருமதி P.லாவண்யா ஆகியோரின் அன்புமகன் P.அனந்தகிருஷ்ணன் MBA., ஆகியோரது திருமணம் இன்று காலை பழனி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி மங்கள் மஹாலில் நடைபெற்றது.
மறைந்த எஸ்.ஆர்.இராஜேந்திரன் இல்லத்திருமணவிழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆயக்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சுதாமணி கார்த்திகேயன், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்க்கொடி சேகர், சுந்தரி அன்பரசு உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பி.இராமராஜ், கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் குணசேகர் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.