🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெண்பிள்ளைகள் கூடி மகளிரணி அமைப்பாளருக்கு செய்துவித்த மணிவிழா!

கோவை மாவட்டம் ஈச்சனாரியைச் சேர்ந்தவர் திரு.என்.நாகராஜ். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராகப்பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றவர். இவரது துணைவியார் திருமதி.என்.பாக்கியலட்சுமி. கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மகளிரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கின்றார். இத்தம்பதிகளுக்கு 1.திருமதி. மைதிலி அன்பரசு M.B.A., 2.திருமதி. தாரணி யோகேஷ் B.E., 3.செல்வி.சௌமியா ஆகிய மூன்று மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர். திருமதி. தாரணி யோகேஷ் தம்பதியினர் பெங்களூரில் சாப்ட்வேர் இஞ்சினியராகப் பணியாற்றிவருகின்றனர்.


பல ஆண்டுகள் தம்பதிகளாக இல்லற வாழ்வில் இணைந்துவாழ்ந்து, பல பல சுக, துக்கங்களைக் கடந்து, வெற்றிகரமான குடும்ப வாழ்விற்கு முன்னுதாரணமாகத் திகழும் தங்கள் பெற்றோர்களிடம், கணவன்,மனைவிகள் தம்பதிகள் சகிதமாக, தங்கள் குழந்தைகளோடு இணைந்து ஆசீர்வதம் பெறுவதின் மூலம் தலைமுறைகள் செழிக்கும், வாழ்வில் வளம்கொழிக்கும், நீண்ட ஆயுளைப்பெறலாம் என்பது ஐதீகம். மேலும், திருமண தடைகள், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளுக்குள்ளானவர்களும் இத்தம்பதியினரிடம் ஆசிபெறுகின்றனர். இதனடிப்படையில் தந்தையின் 60-வது முடிந்து 61-வயதில் அடியெடுத்து வைக்கும்போது பிள்ளைகள் கூடி மணிவிழா கொண்டாடுவது வழக்கம். 


திரு.நாகராஜ் அவர்களுக்கு அறுபது வயது கடந்து அறுபத்தி ஒன்றாவது வயதில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து, தங்கள் பெற்றோர்களான திரு.என்.நாகராஜ - திருமதி.என்.பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு மணிவிழா மணிவிழா கொண்டாட மூன்று மகள்களும் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து கடந்த திங்கள் (05.11.2024) அன்று, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கப்பாடி வட்டம், திருக்கடையூரில் அமைந்துள்ள சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமான பிரசித்திபெற்ற அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் முன்னிலையில் திரு.என்.நாகராஜ - திருமதி.என்.பாக்கியலட்சுமி தம்பதியினரின் மணிவிழா கோலாகலமாக நடைபெற்றது.


இதனைத்தொடர்ந்து மணிவிழா தம்பதியினரிடம் இளம் தம்பதியினர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆசீர்வாதம் பெற்றனர். இவ்விழாவில் குளத்துப்பாளையம் ஊர் நாயக்கர் ஜெயபால், மாசேகவுண்டன்பாளையம் சிவசாமி, ஈச்சனாரி மகாலிங்கம் மற்றும் ஈச்சனாரி, கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மணிவிழா கண்ட மகளிரணி அமைப்பாளர் திரு & திருமதி.பாக்கியலட்சுமி நாகராஜ் தம்பதினர் அனைத்து வளங்களும், நலங்களும்  பெற்று நோய் நொடியின்றி நீடூடி வாழ அன்னை சக்கதேவி அசீர்வதிக்க இராஜகம்பளத்தார் குடும்பங்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved