த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில துணைத்தலைவர் இல்லத் திருமணவிழா!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில துணைத்தலைவரும், இரயில்வே பாதுகாப்புப்படையின் தலைமைக்காவலருமான திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் இல்லத்திருமணவிழா நாளை (08.11.2024) நடைபெறவுள்ளதையொட்டி தலைவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பிரம்மதேசம் கிராமம், தெய்வத்திரு டி.சி.சின்னப்பன் அவர்களின் மகன் மருத்துவர் சி.ஜெகதீசன் B.V.Sc., & AH., இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கீழவலசை கிராமத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில துணைத்தலைவரும் மற்றும் இரயில்வே பாதுகாப்புப்படையின் தலைமைக்காவலருமான திரு.கோபாலகிருஷ்ணன் - திருமதி.பாப்பா ஆகியோரின் அன்புமகள் மருத்துவர் ஜி.பத்மாவதி M.B.B.S., ஆகியோரது திருமணம் த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநிலத்தலைவர் திரு.பி.எஸ்.மணி அவர்களின் தலைமையில், அந்தியூர் வட்டம் முனியப்பம்பாளையம் நலம் மஹாலில் நாளை (08.11.2024, வெள்ளிக்கிழமை) காலை 5 - 6 மணிக்குள் நடைபெறவுள்ளது.
முன்னதாக, இன்று (07.11.2024) மாலை நடைபெறும் திருமண வரவேற்புவிழாவில் பண்பாட்டுக்கழக மாவட்ட, மாநில நிர்வாகிகள், தோழமை அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
செல்வன் சி.ஜெகதீசன் - செல்வி ஜி.பத்மாவதி ஆகியோரின் திருமணத்தையொட்டி சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் புதுமணத்தம்பதியினரின் இல்லறம் சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர்.