🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டோக்கியோவில் உலகம் வியந்த தனுஷ் நெப்போலியன் திருமணம்!

1991-இல் இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "புதுநெல்லு புதுநாத்து" மூலம் தமிழ்திரைவுலகிற்கு அறிமுகமானவர் திருச்சியைச் சேர்ந்த நெப்போலியன். சுமார் 70 படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்துக்கொண்டவர் நெப்போலியன். கிழக்குச்சீமையிலே படத்தில் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி, தசாவதாரம், விருமாண்டி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு நுழைந்த நெப்போலியன் 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதித்துறை இணையமைச்சராகப் பொறுப்புவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நெப்போலியன்-ஜெயசுதா தம்பதியினருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டுமகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷ் நான்கு வயது இருக்கும்போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து, மகனுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.

இந்நிலையில் கடந்த வாரம் (நவம்பர் 7-ஆம் தேதி) நடிகர் நெப்போலியன் மூத்த மகனான தனுஷுக்கும், திருநெல்வேலியை சேர்ந்த பெண் அக்ஷயாவுக்கும் ஜப்பானில் நாட்டிலுள்ள டொக்கியோ நகரில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்தத்திருமண விழாவில் நமது இராஜகம்பளத்து உறவினர் என்.எஸ்.இராஜசேகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தனுஷ் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து டோக்கியோ புறப்பட்டுச்சென்ற இராஜசேகரன், நெப்போலியன் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜசேகரன் தனுஷ்-க்கு அளித்துள்ள வாழ்த்து மடலில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனுஷ், நோயை வெற்றிகொண்ட விதம் குறித்தும், தனுஷின் தன்னம்பிக்கை குறித்தும் கவிதையாக வடித்துள்ளார். முழு வாழ்த்துமடலும் கீழே...



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved