இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் இல்லத்திருமண விழா!
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகபள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன் இல்லத்திருமணவிழா நாளை (20.11.2024) நடைபெறவுள்ளது. இதில் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்துகின்றனர். அதன் விவரம் வருமாறு,
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், வ.புதுப்பட்டி கிராமம், திரு.சு.தங்கசாமி - திருமதி அய்யரம்மாள் ஆகியோரின் மகன் வழிப்பேத்தியும், திரு.த.சுப்பிரமணியன்- திருமதி.அன்னக்கொடி ஆகியோரின் அன்புமகளுமான செல்வி சு.திருமலர்ச்செல்வி, விருதுநகர் மாவட்டம் இராமநாயக்கன்பட்டி திரு.ஆர்.கந்தவேல் - திருமதி கே.சமுத்திரகனி ஆகியோரின் அன்புமகன் மருத்துவர் கே.சரவணக்குமார் ஆகியோரது திருமணம் 20.11.2024, புதன்கிழமை காலை அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் அருப்புக்கோட்டை தொழிலதிபர் திரு.மணிவாசகன், தொழிலதிபர் திரு.எஸ்.பி.கிருஷ்ணன், திமுக பிரமுகர் திரு.வை.மலைராஜன், பேராசிரியர் திரு.பிச்சைராமன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
முன்னதாக, இன்று (19.11.2024) மாலை நடைபெறும் திருமண வரவேற்புவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத்தலைவர் ஆர்.பெருமாள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சுந்தர்ராஜ், பி.தங்கம். இராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பி.இராமராஜு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.