உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமண வரவேற்பு விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து!
நாமக்கல் மூத்த வழக்கறிஞரும், இராஜகம்பளத்தார் சமுதாய மூத்த தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்களின் இல்ல திருமண வரவேற்புவிழா நேற்று (24.11.2024) மாலை நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையிலுள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் விவரம் வருமாறு,
நாமக்கல் மூத்த வழக்கறிஞரும், மதிமுக பிரமுகருமான திரு.பி.பழனிச்சாமி அவர்களின் பெயரனும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பி.ஆர்.வினீத், திருப்பூர் சக்தி முருகன் டையிங், ஸ்ரீவாரி டிரேடர்ஸ் உரிமையாளருமான திரு.தேவராஜ் அவர்களின் மகள் டி.பிரியதினிஷா ஆகியோரது திருமண வரவேற்புவிழா நேற்று (24.11.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஸ்ரீ லட்சுமி திருமண மாளிகை-யில் நடைபெற்றது.
திருமண வரவேற்புவிழாவி கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல்துறை தலைமை மருத்துவர் அசோகன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பவுல்ராஜ், பண்பாட்டுக்கழக மாநில காப்பாளர் மோதூர் முனுசாமி, ஜே.எம்.பழனியப்பன், முத்துசாமி, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், மணமக்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜமீன்தார்கள்,சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.