வீரசக்கதேவி ஆலய 69-ஆம் ஆண்டு சித்திரைத்திருவிழா!

பாஞ்சாலங்குறிச்சியில் எழுந்தருளி கம்பளத்தார்களுக்கு அருள்பாவித்து வரும் அன்னை வீரசக்கதேவி ஆலய 69-ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆலயக்குழு நிர்வாகம். இதன் விவரம் வருமாறு,
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், வரலாற்றின் கால ஓட்டத்தில் மேலும், கீழுமாக வெற்றியின் உச்சம், படுபாதாள தோல்வி என வாழ்க்கையின் இருமுனைகளையும் சந்தித்தாலும், முற்றிலும் அழிந்துபோகாமல், வீழ்ந்தபோதெல்லாம் துடிப்போடு துளிர்விடும் சமூகமான இராஜகம்பளத்தார் சமூகத்தை அடைகாத்து, கட்டிக்காப்பாற்றி அருள்பாவித்து வரும் அன்னை வீரசக்கதேவி ஆலயத்தின் 69-ஆம் ஆண்டு சித்திரைத்திருவிழா வரும் சித்திரை மாதம் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுமென சக்கதேவி ஆலயக்குழு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு அறிவிப்பின்படி, வரும் 2025 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் தேதி (21.01.2025) 14-ஆம் ஆண்டு வருஷாபிஷேகமும், மாசி 14-ஆம் நாள் (26.02.2025) மஹாசிவராத்திரியும் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் சித்திரைத்திருவிழா மே மாதம் 9.10 ஆகிய தேதிகளிலும், நவராத்திரி விழா 23.09.2025 முதல் 02.10.2025 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. இது தவிர, 2025 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர பௌர்ணமி பூஜைக்கான அறிவிப்பையும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.