கரூர் கலையரசன் இல்லத் திருமண வரவேற்பு!
கரூர் கலையரசன் இல்லத் திருமண வரவேற்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.கலையரசன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். இதன் விபரம் வருமாறு,
கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியவர் கோ.கலையரசன். தற்போது அரவக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்துவரும் கோ.கலையரசன். தனது ஆற்றல்மிகு செயல்பாடுகளால் கட்சித்தலைமை வரை அறியப்படுபவர். தவிர, தமிழகம் தழுவிய அளவில் இராஜகம்பளத்தார் சமுதாய மக்களிடையே நன்கு பரிட்சயமானவர். சமுதாய அமைப்புகளோடும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர்.
திரு.கோ.கலையரசன் - திருமதி க.திலகவதி தம்பதியரின் அன்பு மகன் க.அகல்யன் B.E., M.A., LL.B., - , திருப்பூர் திரு ஆர்.பால்ராஜ் - திருமதி பி.வளர்மதி தம்பதியரின் அன்பு மகள் பி.ப்ரியதர்ஷினி M.A., LL B , ஆகியோரது திருமண வரவேற்பு விழா நாளை (01.06.2025) மதியம் 12 மணி முதல் 3 மணிவரை அரவக்குறிச்சியில் அமைந்துள்ள என்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இத்திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். மேலும் இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளைக்கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், த.வீ.பொ. பண்பாட்டுக் கழகம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

