🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இசைமகா சமுத்திரத்தின் 133-வது பிறந்தநாள் ஜெயந்தி!

இசைமேதை நல்லப்பசாமி பாண்டியனின் பிறந்தநாள் விழா வாழ்த்துக்கள்!

விளாத்திகுளம் சுவாமி அவர்கள் காடல்குடி மன்னர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் கட்டபொம்மனுடன் இணைந்து  ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் தங்களது உடைமை, ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் இழந்தவர்கள், சுவாமிகள் குடும்பத்தினர்  காடல்குடியை விட்டு பிற்காலத்தில் விளாத்திகுளத்தில் குடியேறினர்.


இவர் விளாத்திகுளத்தில் வாழ்ந்த காரணத்தினால் இவரை விளாத்திக்குளம் சுவாமிகள் என்று இசை மேதைகளும் ரசிகர்களும் அன்போடு அழைத்தனர்.கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவரான நல்லப்ப சுவாமிகள் பட்டி தொட்டி எங்கும் தனது பாடலால் இசை ரசிகர்களை கவர்ந்தவர். கரஹரப்பிரியா ராகத்தில் சக்கரவர்த்தியாக விளங்கிய இவர், பாரதியாரின் நெருங்கிய நண்பரும் ஆவார். பாரதியாரின் பல பாடல்களுக்கு பண் அமைத்து கொடுத்தவர், கே.பி.சுந்தரம்பாள், தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைக் கலைஞர்களால் இவர் பெரிதும் மதிக்கப் பெற்றவர்.

இவரது பொன்விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ம.பொ.சி. அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்தினர். சுவாமி கிருபானந்த வாரியார், முருகதாஸ் சாமிகள் ஆகியோரின் பாராட்டையும் பெற்றவர். இசைக்கு இவருக்கு ஈடாக எவரும் இல்லையென ஜெகவீரபாண்டியனார் இவருக்கு கவிபுகழ் சூடியுள்ளார். காடல்குடி சின்னச்சாமி பாண்டியனின் விருப்பத்திற்கு இணங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுப்பு அவர்களும், திரு.சீனிகுருசாமி அவர்களும் செய்த ஏற்பாட்டின் பெயரில் சென்னை இயல் இசை நாடக மன்றத்தில் அன்றைய முதலமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆரால் சுவாமிகளின் படம் திறந்து வைக்கப்பட்டது. ராஜாஜி ஹாலில் கவர்னர் பீஷ்ம நாராயணசிங் அவர்களாலும் படம் திறந்து  வைக்கப்பட்டது. சங்கீத வித்வத் சபையின் 60 வது ஆண்டு விழாவிலும் சாமிகளின் படம் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. இவை அனைத்தும் க.சுப்பு அவர்களின் முயற்சியிலே நடந்தது. தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் விளாத்திகுளத்தில் சுவாமிகளின் விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை க.சுப்பு, சீனிகுருசாமி, மு.சங்கரவேலு ஆகியோர் செய்திருந்தனர். விளாத்திகுளம் சாமிகளின் நினைவிடம்  ஆக்கிரமிக்கப்பட்ட போது புதூர் வட்டார ராஜகம்பள சங்கமும், வீரபாண்டியக் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகமும் அந்த ஆக்கிரமைப்பை அகற்றும் பணியில் பெரும்பங்கு வகித்தது. நமது கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில்  அரசுக்கு கோரிக்கை வைத்து விளாத்திகுளம் சுவாமிக்கு நினைவுத்தூண் அமைத்து சிறப்பு செய்யப்பட்டது. இன்று விளாத்திகுளம் நல்லப்பசாமி பாண்டியனின் பிறந்தநாள் விழா இந்நந்நாளில் அவரது புகழ் எட்டுத் திக்கிலும் பரவிட நாம் அவரது புகழை தொடர்ந்து பாடுவோம்.

வாழ்க இசைமேதையின் புகழ்...

இப்படிக்கு
மு.சங்கரவேலு, தலைவர்,
த.வீ.க.ப.கழகம்.

நன்றி: தமிழ் இந்து, தினமலர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved