🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே! மேலுமுறையீட்டு மனுக்கு சமூகநீதி கூட்டமைப்பு பதில்!

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 1

மாண்புமிகு உயர்நீதி மன்றம் இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் உட்பிரிவு செய்ய அனுமதிக்கும் போது சின்னையா வழக்கில் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்தது சரியா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 1

இந்திரா சஹானி வழக்கின் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே சின்னையா வழக்கில் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அந்த தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்ததுதான் சரி. ஒரே நிலையில் இருப்பவர்களை வேறு வேறு பிரிவுகளாக வைக்கவே முடியாது. உட்பிரிவுகள் செய்ய இரண்டு பிரிவுகளுக்கும் பெருத்த சமூக கல்வி அளவுகளில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பது 9 நீதிபதிகளின் தீர்ப்பு. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியான, சட்டப்படியான, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்களின் அடிப்படியில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எந்த முகாந்தரமும் இல்லை. அரசின் மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 2

மாண்புமிகு உயர்நீதி மன்றம் ஒத்த பிரிவினரை மேலும் பிரிக்கலாமா என்ற கேள்வி 7 நீதிபதிகள் கொண்ட அமர்பு விசாரித்து வரும்போது ஒத்தபிரிவினரை மேலும் பிரிக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது சரியா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 2

7 நீதிபதிகள் விசாரிக்கும் பிரச்சனை வேறு இங்கு எந்த வேறுபாடும் இல்லாமல் மூன்று பிரிவாக பிரித்தது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற தீர்ப்பு மிகச் சரியானது.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 3

மாண்புமிகு உயர்நீதி மன்றம் மராத்தா வழக்கில் மாநில அரசுக்கு 102ம் திருத்தத்திற்குப்பிறகும் சரத்து 15 & 16க்கு கீழ் இடஒதுக்கீடு வழங்கிக்கொள்ள அதிகாரமுள்ளது என்ற தீர்ப்பை கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 3

உச்ச நீதிமன்றம் மராத்தா வழக்கில் மாநில அரசுக்கு SEBCயை அறிவிக்க அதிகாரமில்லை. இடஒதுக்கீடு வழங்க மட்டுமே அதிகாரமுள்ளது. அறிவிக்கும் அதிகாரம் மாற்றும் அதிகாரத்தையும் வகைப்படுத்தும் அதிகாரத்தையும் உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளது. அதனடிப்படையிலேயே மாநில அரசுக்கு MBCயை மூன்றாக வகைப்படுத்த அதிகாரமில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இடஒதுகீட்டின் அளவை முடிவு செய்வது வேறு SEBCவை வகைப்படுத்துவது வேறு.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 4

மாண்புமிகு உயர்நீதி மன்றம் 15.8.2018லிருந்து 19.8.2021 வரை சமூகரீதியாக  கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்று சரத்து 338B, 366(26C) குறிப்பிட்டிருப்பது ஜனாதிபதி 342A(1)ன் கீழ் அறிவிக்கும்வரை மத்திய பட்டியலுக்கு மட்டும்தான் பொருந்தும் சரத்து 338B மாநில MBC பட்டியலுக்கு பொருந்தாது என்பதைப்பார்த்திருக்க வேண்டாமா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 4

“338B(9) The Union and every State Government shall consult the Commission on all major policy matters affecting the socially and educationally backward classes.".

மேற்படி சரத்து மாநில அரசுக்கும் பொருந்தும் என்று தெளிவாக கூறியிருக்கும் போது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமல்ல. 105வது திருத்தம் இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது இடஒதுக்கீடு முக்கியமான கொள்கை முடிவு கண்டிப்பாக தேசிய ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகச் சரியானதே.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 5

மாண்புமிகு உயர்நீதி மன்றம் போதிய பிரதிநிதித்துவம், பிற்படுத்தப்பட்ட தன்மை, நிர்வாக திறமை சோதனைகள் MBC பிரிவை உருவாக்கும்போதே செய்யப்பட்டுவிட்டது. MBCயை மூன்றாக பிரிப்பதற்குத் மீண்டும் தேவையில்லை என்பதை பார்த்திருக்க வேண்டாமா?.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 5

MBCயை மூன்றாக பிரிப்பதற்கும் புள்ளிவிபரங்கள் அவசியம் என்பதுதான் சட்டம். அந்த புள்ளிவிபரங்களின் நோக்கமே அந்த அளவுகோள்களில் மற்ற பிரிவுகளைவிட எந்த அளவு பின்தங்கியுள்ளது என்பதை பார்ப்பதற்குத்தான். எனவே தீர்ப்பு சரியான, அசைக்கமுடியாத, அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 6

மாண்புமிகு உயர்நீதி மன்றம் அரசும் மற்ற நிறுவனங்களும் நீண்டகாலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆணையத்தின் கணக்கெடுப்பை 14 உறுப்பினர்கள் சில சமூதாயங்களின் மக்கள் தொகை சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்தற்காக அதை செல்லாதது என்று முடிவு செய்தது சரியா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 6

ஆணையத்தின் பரிந்துரை என்பது பொரும்பான்மை பரிந்துரையே. தனிநபர் பரிந்துரை ஆணையத்தின் பரிந்துரையல்ல என்பதுதான் சட்டம். மேலும் அம்பாசங்கர் புள்ளிவிபரம் சட்டம் 45/1994க்கு போதுமானது இல்லை புதிய புள்ளிவிபரங்களை கணக்கில் எடுக்க வேண்டும் என்று 13.7.2010-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றது. இம்முறை நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும். இதே நிலைப்பாட்டைத்தான் கர்நாடகாவில் பவித்திரா வழக்கிலும் மஹாராஸ்ட்ராவில் மராத்தா வழக்கிலும் உயர், உச்ச நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புக்களில் வழங்கியுள்ளது. அதாவது அந்த மாநிலங்களிலும் பல சரியான ஆணையங்களின் சரியான புள்ளிவிபரங்கள் ஏற்கனவே இருந்தது இருப்பினும் புதிய புள்ளிவிபரம் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பவித்திரா வழக்கு 1-ல் உத்தரவிட்டுள்ளது. எனவே அம்பாசங்கர் தனிநபர் அறிக்கை எந்த அடிப்படையிலும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகச்சரியான தீர்ப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved