🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக பொதுக்குழு உறுப்பினராக திருமதி.இந்திராணி தேர்வு! தலைவர்கள் வாழ்த்து!

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கிளைக்கழகம் தொடங்கி பல்வேறு பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி வந்தது. கிளை, ஒன்றிய,பேரூர்,வட்ட, நகர கழக தேர்வுகள் நடைபெற்று முடிந்து தற்போது மாவட்டக்கழக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கட்சி அமைப்பு மட்டத்திலான மாவட்டங்களின் எண்ணிக்கை 76-இல் இருந்து 72 ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, மாவட்டச் செயலாளர் பதவிக்கான போட்டி கடுமையானது.

இதற்கிடையே திமுக-வின் 15-வது பொதுத்தேர்தலில் மாவட்டச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு கடந்த 22-ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.வேட்புமனு பரிசீலைனைக்குப்பிறகு 72 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலில் 64 மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு கடும் போட்டி உள்ளதால் சமரச முயற்சியில் தலைமை இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்று தெரிகிறது. இதனையடுத்து அக்டோபர் 9-ஆம் தேதி சென்னையில் கூடும் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டக்கழகத்திற்கும் அவைத்தலைவர், செயலாளர், 3 துணைச்செயலாளர், பொருளாளர், 3 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 6 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக தோக்காவாடி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் திருமதி. இந்திராணி மயில்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

திமுக கழகத்தில் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி.இந்திராணி மயில்சாமி அவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், அணிமூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved