ஊராட்சி மன்றத் தலைவர் -திருச்செங்கோடு-திரு. V.தாமரைச்செல்வன்
திரு.V.தாமரைச்செல்வன் அவர்கள் 03.03.1984 இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள பொம்மக்கல்பாளையம் கிராமத்தில் திரு.விஜயராஜ் – திருமதி. ராஜேஷ்வரி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை பயின்றுள்ளவர் பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். திருமதி.T.தமிழ்செல்வி அவர்களை மணமுடித்துள்ள திரு.தாமரைச்செல்வன் தம்பதியினருக்கு, T.இனியன் மற்றும் T. தீபன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
திரு.தாமரைச்செல்வன் அவர்கள் இளமைக்காலம் தொட்டே தி.மு.க ஆதரவாளராக வளர்ந்தவர். 2004-ஆம் ஆண்டு முறைப்படி தன்னை திமுக-வில் இணைத்துக்கொண்டு அடிப்படை உறுப்பினரானவர், கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2011-ஆம் ஆண்டு திருச்செங்கோடு ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளராகப் பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார். கட்சி அழைப்பு விடுக்கும் அனைத்து போராட்டங்கள், மறியல்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். மேலும் கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தன் பகுதிகளிலிருந்து பெருமளவு மக்களைத் திரட்டி பங்கேற்று வருகிறார் திரு.தாமரைச்செல்வன் அவர்கள்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் எளிய மனிதராக, அவர்களின் தேவைகளையும், குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து உரியமுறையில் தீர்வுகண்டிட தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளக்கூடியவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள். இதுதவிர உள்ளூரில் நடைபெறும் அனைத்து சுக-துக்கங்களிலும் பங்கேற்று குடும்பத்தில் ஒருவராக உள்ளார். அரசியல், விவசாயம் தவிர A.V.R டிரேடர்ஸ் என்ற பெயரில் சாணல் கோணிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தந்தையார் காலத்திலிருந்து சுமார் 28 ஆண்டுகாலமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 15-ஆண்டுகாலமாக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாலும் தேர்தல் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு ஒன்றியம், அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக முதல்முறையாக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் திரு.தாமரைச்செல்வன் அவர்கள். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களின் ஆதரவைப்பெற்று அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.தாமரைச்செல்வன் அவர்கள், அம்மக்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சாதி,மத, இன, மொழி பாகுபாடின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிகும், சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.