சமுதாயப்பணியில் களமிறங்கும் மகளிர்! புதிய கிளை தொடக்கம்!
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, சமுதாயத்தை கட்டமைக்கப்பட வேண்டிய தேவை குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து கிராமம் தோறும் கிளை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில், சமுதாயப்பணியில் ஈடுபட மகளிரும் ஆர்வம் காட்டியதையடுத்து, மகளிரணியும் தனியாக தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஈச்சனரியிலும், சின்னத்தொட்டிபாளையத்திலும் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) மாலை கோவை வடக்கு மாவட்டம், குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட கம்பள சமுதாயம் நல சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஊர்நாயக்கர் K.ஜெயபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் குளத்துப்பாளையம் கிளை மகளிர் அணித்தலைவராக திருமதி.அமுதா, துணைத்தலைவராக திருமதி.M.மோகனா உள்பட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கோவை வடக்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராக திருமதி.K.R.D.லட்சுமி தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்திற்கு ஊர் நாயக்கர் சின்னவர் A. மாரையா நாயக்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மகளிர் அமைப்பாளர் என்.பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில் மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் கிளை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

