🔴 LIVE | முப்பெரும் விழா 2023


லாரி டிரைவர் மகளை மருத்துவராக்கிட துணை நிற்கும் சமுதாயம்!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் ஓலபட்டியில் வசித்துவருபவர் ஆளவந்தான். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செல்வி திவ்யதர்சினி, கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 566 மதிப்பெண்பெற்று வெற்றிபெற்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

மிகவும் எளிய குடும்பப் பின்னனியோடு விடுதியில் தங்கிப்படித்து வரும் செல்வி.திவ்யதர்ஷினியின் பெற்றோர்கள் மகளின் கல்விக்கட்டணத்தை செலுத்தமுடியாமல் தடுமாறிவருவதாக நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக மாணவிக்கு உதவிட முன்வந்த அறக்கட்டளையினர் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் தொழிலதிபர் துரைசாமி அவர்களின் பங்களிப்போடு, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும் இணைந்து முதலாமாண்டு கல்விக்கட்டணத்திற்கான உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாணவி திவ்யதர்ஷினியிடம் நேரடியாக காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை தலைவர்  திரு.பழனிசாமி செயலாளர் திரு.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் திரு.மணி, அமைப்புச் செயலாளர் திரு சரவணன், சட்டக்குழு செயலாளர் திரு.சதீஷ்குமார் மற்றும்  அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.மனோகரன் திரு.சின்னுசாமி ஆகியோர் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் திரு. பழனிசாமி, பெரியூர் திரு.மணி என்கின்ற முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவியிடம் காசோலையை வழங்கினர்.  நிதியுதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் தாயார் திருமதி.சுதா கண்ணீர் மல்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

சமுதாயத்திற்கு ஒரு மருத்துவ மாணவியை உருவாக்கிட துணைநின்ற சங்கத்தின் அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஏழைத்தாயின் ஆனந்த கண்ணீர்துளிகளை சமர்ப்பிக்கின்றோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved