🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக சர்வே! ஒலிக்குமா உரிமைக்குரல்?

அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், தொகுதி பொறுப்பாளர்கள் நியமித்தல் போன்ற வேலைகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இதில் ஆளும்கட்சியான திமுக பெனின்சுலார் என்ற நிறுவனம் மூலம் கட்சியினரிடன் ஆட்சியின் நலத்திட்டங்கள், அமைச்சர்கள் செயல்பாடுகள்,  மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

பெருஞ்சாதிகள் ஆதிக்கம் செலுத்தும் திமுக-வில் என்றுமே சிறுபான்மை சாதி இந்துக்களின் நிலை மிகமோசமாகவே இருந்து வருகிறது. மாறாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் அதிமுகவை வழிநடத்துகையில் பெருஞ்சாதியினுக்கான முக்கியத்துவத்திற்கு குறைவில்லை என்றாலும் கட்சியில் நேரடியாக சாதி அரசியல் செய்யமுடியவில்லை. சாதாரண தொண்டனுக்கும் உரிய மரியாதையை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அதாவது சாதியைவிட கட்சி பெரியது என்ற நிலையிலேயே மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். இருபெரும் ஆளுமைகள் இல்லாத தற்போதைய அதிமுகவில் சாதிய மேலாதிக்கம் வெளிப்படையாக தெரிகிறது. சமீபத்தில்  உள்துறை அமைச்சருடனான சந்திப்பில் கூட சாதி அரசியல் அப்பட்டமாக வெளியானது. 

மத்தியில் ஆளும் தேசியக்கட்சியான பிஜேபி இந்துக்களாக பெரும்பான்மை மக்களை ஒன்று திரட்டினாலும், வாய்ப்பு என்று வரும்பொழுது நாடார், கவுண்டர் போன்ற பணக்கார சாதிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

இப்படியாக தமிழக அரசியல் களம் தனித்த ஆளுமைகளின்றி பெருஞ்சாதி அரசியலை முன்னிலைப்படுத்தி நகர்ந்துள்ள நிலையில், அரசியலில் வாய்ப்பற்ற தொட்டிய நாயக்கர் போன்ற நூற்றுக்கணக்கான சாதிகளைச் சேர்ந்தவர்கள் போதிய வாய்ப்புகளை பெறமுடியாமல் திணறிவருகின்றனர். இதுவரை ஓரளவு அரசியல் வாய்ப்புகளைப் பெற்றுவந்த நாயுடு, ரெட்டியார், செட்டியார் சமூகங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் அரசியல் செல்வாக்கை இழந்து வருகின்றன.

தமிழக அரசியலின் இந்தப்போக்கை மாற்றவேண்டிய பொறுப்பு இதுவரை அரசியல் அதிகாரங்களை சுவைக்காத இந்து சிறுபான்மை சாதிகளின் தலைவர்களுக்கு உள்ளது. அரசியல் களத்தில் இதையொரு பேசுபொருளாக்கி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த  அரசியல் தலைவர்கள்  முன்வரவேண்டும். தங்கள் அரசியல் வட்டாரத்தில் பெருஞ்சாதிகளல்லாத தலைவர்களிடம் இக்கருத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான அரசியல் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். திமுக போன்ற கட்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளும் போது அந்நிறுவனங்களிடம் தாங்கள் சார்ந்த சாதிய அமைப்புகள் மூலம் தலைமைக்கு கருத்துகளை கொண்டு சேர்க்க வேண்டும்.

யாரோ நடத்துகிற கட்சியில் யாருக்காகவோ உழைக்காமல் உங்கள் நலனுக்காகவும், உங்கள் சமுதாய நலனுக்காகவும் உழைத்திடும் போக்கை வாய்ப்பற்ற சாதிகளின் அரசியல் தலைவர்கள் வளர்த்துக் கொண்டால் என்றாவது ஒருநாள் வெல்லலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved