மணப்பெண் நான்காண்டுகள் வீட்டுவேலை செய்யத்தேவையில்லை - சூடான் நாட்டு கலாச்சாரம்

பெண்களுக்கு சமையலறையிலிருந்து 4 வருட சுதந்திரம் கொடுக்கும் தெற்கு சூடான் நாட்டின் திருமணங்கள்!
தெற்கு சூடான் நாட்டிலுள்ள டிங்கா பழங்குடிகளின் திருமண வழக்கப்படி ஒரு ஆண் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு 100 முதல் 500 பசுக்கள் வரை வரதட்சணையாகக் கொடுத்து திருமணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி திருமணம் செய்துகொண்ட அவனது மனைவி 4 வருடங்கள் சமைக்கவோ, துடைக்கவோ அல்லது பிற வீட்டு வேலைகளையோ செய்யமாட்டாள். இந்த காலக்கட்டத்தை "Anyuuc" ( வரவேற்பு காலம் ) என்று அழைக்கிறார்கள். புதிய மணமகள் ஓய்வெடுக்கவும் மற்றும் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் நடத்தைகளைப் புரிந்துகொள்ளவும் அந்த வீட்டு மதிப்புகளை உள்வாங்கிக் கொள்ளவும் இந்த காலகட்டம் அவளுக்கு உதவுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் கணவனின் சகோதரி மற்றும் வீட்டிலுள்ள பிற பெண்கள் சமைப்பது, பாத்திரம் கழுவுவது, விறகு சேகரிப்பது, தண்ணீர் எடுப்பது, பிற வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றைச் செய்து உதவுவார்கள்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கணவர் "THAAT" என்று அழைக்கப்படும் சமையல் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்து குறைந்தது 3 மாடுகளும் 5 ஆடுகளும் வெட்டி ஊருக்கே விருந்து கொடுத்து பின்னரே தனது மனைவியை சமைக்க அழைப்பார்.
ஆனால் இந்த இடைப்பட்ட 4 வருடங்களில் ஆண் தனது மனைவியுடன் தவறாக நடந்து கொண்டால், மனைவி வெளியேற முடிவு செய்யலாம் மற்றும் வரதட்சணையைக் கூட திருப்பி செலுத்த வேண்டியதில்லை.