🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தில் முறைகேடு - லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சி

நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவர் சேர்க்கைக்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) நடத்தும் NEET தேர்வுகளில் பல்வேறு குழப்பங்களும், ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெற்றதின் காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இப்போது அக்னி பாத் என்ற திட்டத்தின் கீழே நாட்டின் பாதுகாப்பு துறையில் ஆட்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துதிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்னி பாத் எனும் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் மத்தியில் மத்திய பிரத்சம் ஜபல்பூரில் நிதிஷ் குமார் திவாரி எனும் உயர் சாதி ஹிந்துவை தேர்வு செய்து இருப்பது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாமை செப்டம்பர் மாதம் 2022 ஆண்டு உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் 26, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.

தேர்வில் கட் ஆப் (CUT OFF) மதிப்பெண் 169 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 159 மதிப்பெண் பெற்ற நிதிஷ் குமார் திவாரி தேர்வானதும், 167 மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள் தேர்வாகதை அறிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை கோரி மாணவர்கள் சிலர் விண்ணப்பித்தநர். இதில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மாணவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்துள்ளது.

RTI பதில் படி, நிதிஷ் குமார் திவாரி (ரோல் எண் - 140241) ஒருங்கிணைந்த உடல் தேர்வு (88) மற்றும் எழுத்துத் தேர்வில் (71) 159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நவம்பரில் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலில் நிதிஷ் குமாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது (பட்டியலை கீழே காணலாம்).


மேலே கொடுக்கப்பட்ட தேர்ச்சி அடிப்படையில் நிதிஷ் குமார் திவாரிக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.


நிதிஷ் குமார் பெற்ற மதிப்பெண் குறித்த RTI பதில்




இந்த நிலையில் சக மாணவர்கள், தங்களுக்கான மதிப்பெண் விபரங்களை RTI மூலம் பெற்றனர். அதில் அவர்கள் நிதிஷ் குமார் திவாரியை விட அதிகமான மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்தது. அதன்படி மாணவர்கள் சுஜீத் குமார் ராவத் (160.5), விகாஸ் சிங் (163), அபிஷேக் வர்மா (165.5), சச்சின் சிங் (166.5) மற்றும் சவுரப் சிங் (167). ஆகியோர் நிதிஷ் குமார் திவரியை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது உறுதியானது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும், ஆயுதப்படை தீர்ப்பாயம் (AFT) மட்டுமே இதை விசாரிக்க முடியும் என்றும் வாதிட்டார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் டிசம்பர் 13, 2022 அன்று வழக்கைத் தள்ளுபடி செய்து, மாணவர்களை AFT ஐ அணுகுமாறு கேட்டுக் கொண்டது. மனுதாரர்கள் AFT-யை அணுகியபோது, ​​"ஆயுதப்படை தீர்ப்பாயம் ஆயுதப்படையில் இருப்போருக்கானது. மனுதாரர்கள் ராணுவத்தில் பணியாற்றவில்லை என்பதால், AFT-க்கு இந்த விஷயத்தைக் கேட்க உரிமை இல்லை" என்று கூறப்பட்டது.

AFT ஆல் நிராகரிக்கப்பட்ட பிறகு, மீண்டும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகி அனைவரின் மதிப்பெண்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் இந்திய அரசு மற்றும் பிற தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் (டிஎஸ்ஜி) புஷ்பேந்திர யாதவ், தனி நபர் சார்ந்த தகவல்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மதிப்பெண்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க முடியாது என்று வாதிட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஷால் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் எந்த போட்டித் தேர்விலும், அவர்களின் மதிப்பெண்களை வெளியிடுவது தனிப்பட்ட தகவல் அல்ல என்று கூறினார்.

நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு 15 நாட்களுக்குள் அனைவரின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று 01-07-2024 அன்று உத்தரவிட்ட நிலையில் இந்த நிமிடம் வரை முழு விபரமும் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமன்றி, தேர்வான, பணி நியமனம் பெற்ற நபரான நிதிஷ் குமார் திவாரியை உடல் தகுதி இல்லை என்று கூறி பணியில் இருந்து நீக்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் நிதிஷ் திவாரியைப்போல் எத்தனைபேர் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை.

நீதிமன்ற படி ஏறி சட்டப் போராட்டத்திற்குப் பின்னரும் விடை கிடைக்காத பல வழக்குகள் இன்றும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லாத அனைத்துமே இப்படி ஊழலுக்கும் முறைகேட்டிற்கும் வழி வகை செய்யும். இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுப்பதில் இத்தனை முறைகேடு என்பது பாதுகாப்பு சார்ந்த விஷயத்திலும் கூட இந்த அரசாங்கம் வெளிப்படைத்தன்மையில்லாமல் அக்கறையின்றி நடந்து வருவதை காட்டுகிறது.

நன்றி:கீற்று

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved