🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புதன் கிரகத்தில் கொட்டிக்கிடக்கும் வைரம்! பூமிக்கு கொண்டுவருவது சாத்தியமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கிரகமான புதன் பற்றிய எதிர்பாராத கண்டுபிடிப்பு சமீபத்திய ஆய்வின் மூலம் சாத்தியமாகியுள்ளது. புதனின் மேற்பரப்பிற்கு அடியில் வைரம், வைடூரியங்கள் நிரம்பி வழிவதை புதன் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஏராளமான ஆச்சர்யமான தகவல்கள் தினசரி வெளியான வண்ணம் உள்ளது.

2008 முதல் 2015 வரை, MESSENGER விண்கலம் புதனைச் சுற்றி வந்தது, இது புதன் கிரகத்தின் கலவை பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, புதனின் மேலோட்டத்திற்கு அடியில் 10 மைல் தடிமன் கொண்ட அடுக்கு முன்பு கிராஃபைட்டால் ஆனது என்று கருதப்பட்டது. கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள கறுப்புப் பகுதிகள், கார்பன் நிறைந்த எரிமலைக் கடலின் எச்சங்கள் என்றும் நம்பப்பட்டது.

பூமியில் தாதுப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ள நிலையில் விண்கற்கள், பிற கோள்களில் உள்ள தாதுவளம் குறித்த ஆய்வுகளும், அவற்றை பூமிக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்தும் பல ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

சமீபத்தில் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகே உள்ள கோளான புதன் கோளில் சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அந்த கிரகத்தில் ஏராளமான வைரம் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

புதன் கிரத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா, இரும்பு ஆகியவற்றின் கலவை உள்ளதாகவும், அவற்றிற்கு கீழ் சுமார் 14 கிலோ மீட்டர் தடிமனுக்கு வைரம் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் நேச்சர் கம்யூனிகேசன்ஸ் என்ற அறிவியல் இதழில் தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோளில் மேற்பரப்பு வெப்பநிலை 430 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பநிலையை கடந்து பூமியில் தயாரிக்கப்படும் விண்கலன்கள் புதனை சென்றடைவது கடினம். மேலும் இந்த அடுக்கு புதனின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 300 மைல்களுக்கு கீழே இருப்பதால், தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை அறுவடை செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் மிகவும் சவாலானதாக இருக்கும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved