இராஜகம்பளத்தார்கள் கொண்டாடிய 78-வது இந்திய சுதந்திர தினம்!
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா தனது 78-வது சுதந்திரதினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதேபோல் தமிழகத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு தேர்வு வாரியங்கள் மூலம் 32,774 பேருக்கும், அரசு அமைப்புகளில், 32,709 பேருக்கும் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஜனவரி மாதத்துக்குள் 75,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கிடைக்க செய்தவரான முனைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
நாடுமுழுவதும் சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்கு இணையாக தமிழகம் முழுவதும் அமைந்துள்ள இந்திய விடுதலைக்காக சமர்புரிந்து வீரமரணம் எய்திய பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இராஜகம்பள சமுதாய மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரதினத்தையொட்டி மாமன்னரின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வழக்கறிஞர் கிருஷ்ண குமார், வழக்கறிஞர் உத்தண்டுராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல், கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள கட்டபொம்மனாரின் சிலைக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஈச்சனாரி மகாலிங்கம் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட்டது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.காளிமுத்து, கமல் மாரிமுத்து, கொள்கை பரப்புச்செயலாளர் ஆர்.ஏ.கணேசன், தாடி தங்கவேல், டி.மணி, மண்ணூர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த ஊராட்சிக்கான விருதை கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார்.
அதேநிகழ்வில், மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த வருவாய் கோட்டாட்சியர் இரா.சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுச்சான்றும் பதக்கமும் வழங்கி கௌரவித்தார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள்.
இதுதவிர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடையை ஏற்றி வைத்து வீரவணக்கம் செய்தனர்.