நிறுவன தலைவரின் முதலாமாண்டு நினைவுநாளில் அவர்தம் புகழ் ஓங்குக!
நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக சென்னை மாவட்ட முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான தெய்வத்திரு.ஆர்.சென்னையா நாயக்கர் அவர்களின் முதாலம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் புகழை நினைவுகூறுகின்றோம்.
தாய்மொழியாம் சுந்தரத்தெலுங்கின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த சென்னையா நாயக்கர் மெத்தப்படித்தவர் இல்லை என்றாலும் அனுபவ அறிவையும், நேர்மை மற்றும் கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையின் படிநிலையிலிருந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிரூபித்துக்காட்டியவர். மண்ணைவிட்டு பெருந்தலைவரின் உடல் மறைந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு அவரால் உருவாக்கப்பட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும், கட்டபொம்மன் அகாடமியும் அவரின் கனவுகளை நிறைவேற்றுவதின் மூலம் உலகில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.