ஆச்சரியம் ஆனால் உண்மை - இமயமலையைச் சார்ந்து வசிக்கும் உலகின் சரிபாதி மக்கள்
2013ம் ஆண்டு ரெட்டிட் தளத்தில் டெக்சாஸ் பள்ளி ஆசிரியர் கென் மயர்ஸ் என்பவர் ஒரு வரைபடத்தை வெளியிட்டார்.
பர்மாவை நடுநாயகமாக காம்பஸை வைத்து, 3300 கிமி ரேடியஸ் உள்ள ஒரு வட்டத்தை வரைந்தால், அது உலக நிலபரப்பில் 10% மட்டும் தான் இருக்கும். இந்த 10% நிலபரப்பில் மூன்றில் ஒரு பங்கு கடல், சைபிரியா, மங்கோலியா, இமாலய மலைத்தொடர், திபெத் போன்ற ஆட்கள் மிக குறைவாக இருக்கும் பகுதிகளும் ஏராளமாக இருக்கும். ஆனால் மீதமுள்ள 5% நிலபரப்பில் உலகின் 50% மக்கள் தொகை வசிக்கிறது. மீதமுள்ள 90% நிலபரப்பில் உலகின் 50% மக்கள் தொகை வசிக்கிறது என அந்த மேப் கூறியது.
அதன்பின் அந்த மேப் உலகின் பல்வேறு ஆய்வாளர்கள், பேராசிரியர்களால் ஆராயபட்டது. இந்த வட்டத்தை "வேலரி பியரிஸ் வட்டம்" (Valeriepieris Circle) என அழைக்கிறார்கள். இந்த 5% நிலபரப்பில் சுமார் 420 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மீதமுள்ள உலகில் 400 கோடி பேர் வசிக்கிறார்கள்.
இந்த வட்டத்தினுள் இந்தியாவின் பெரும்பங்கு அடங்கி விடுகிறது. தென்னகம் முழுக்க இந்த வட்டத்தில் தான் இருக்கிறது. மேற்கிந்தியாவின் குஜராத்தின் சரிபாதி, ராஜஸ்தான் ஆகியவை இதில் இல்லை. பாகிஸ்தானும் அதற்கு மேற்கே உள்ள நாடுகளும் இல்லை. ஆபிரிக்கா, அமெரிக்கா (தெற்கு, வடக்கு), ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய ஐந்து நாலு கண்டங்கள் இல்லை.
இந்த 10% நிலபரப்பில் அப்படி என்ன மாயமந்திரம் உள்ளது?
இமயமலை தான் அந்த மாயமந்திரம்.
இமயத்தில் இருந்து தோன்றும் சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்த்ரா ஆகியவை இந்தியாவின் வளமை வாய்ந்த கங்கை சமவெளி, சிந்து சமவெளி மற்றும் வங்கதேசத்தின் பத்மா நதி தீரத்தை (கங்கையின் வங்கத்து பெயர்) உருவாக்குகின்றன. இந்தியாவின் பெரும்பங்கு மக்கள் இங்கே வசிக்கிறார்கள் இமயத்தின் வடக்கேயும் இதே கதைதான். அங்கேயும் இமயத்தில் இருந்து தோன்றும் பிரம்மபுத்ரா, யாங்கட்ஸி, மஞ்சளாறு ஆகியவை சீனாவை செழிப்பான மண் ஆக்குகின்றன. இந்த நதிகள் பாயும் பூமியில் தான் சீன நாகரிகம் தோன்றியது. சீனாவின் மக்கள் தொகை கூடுதலான கிழக்கு சீனாவில் தான் சீனாவின் 94% மக்கள் தொகை வசிக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நதியான மீகாங் நதியும் இமயத்தில் இருந்து தான் தோன்றுகிறது. ஆக இமயத்தின் பனி உருகி, நதிகளாக வழிந்தோடும்
இமயத்தில் இருந்து தோன்றும் சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்த்ரா ஆகியவை இந்தியாவின் வளமை வாய்ந்த கங்கை சமவெளி, சிந்து சமவெளி மற்றும் வங்கதேசத்தின் பத்மா நதி தீரத்தை (கங்கையின் வங்கத்து பெயர்) உருவாக்குகின்றன. இந்தியாவின் பெரும்பங்கு மக்கள் இங்கே வசிக்கிறார்கள் இமயத்தின் வடக்கேயும் இதே கதைதான். அங்கேயும் இமயத்தில் இருந்து தோன்றும் பிரம்மபுத்ரா, யாங்கட்ஸி, மஞ்சளாறு ஆகியவை சீனாவை செழிப்பான மண் ஆக்குகின்றன. இந்த நதிகள் பாயும் பூமியில் தான் சீன நாகரிகம் தோன்றியது. சீனாவின் மக்கள் தொகை கூடுதலான கிழக்கு சீனாவில் தான் சீனாவின் 94% மக்கள் தொகை வசிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நதியான மீகாங் நதியும் இமயத்தில் இருந்து தான் தோன்றுகிறது. ஆக இமயத்தின் பனி உருகி, நதிகளாக வழிந்தோடும் பகுதியில் மஞ்சள் நதி நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் ஆகியவை தோன்றின. இன்றும் உலகின் மிக வளமையான பகுதிகளாக அலெக்சாந்தர் முதல் வாஸ்கொடகாமா வரை தேடி, தேடி அலைந்த பகுதிகளாக இவை மாற, உலகின் மக்கள் வாழ மிக ஏற்ற பகுதியாக இவை மாற காரணம் இமயம்.
நன்றி: என்.செல்வன்