🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்பிஎஸ்சி தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்! தேர்வுகள் இனி காலவரிசைப்படி நடக்கும் எனத் தகவல்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நீண்டநாட்களாக காலியாக இருந்த நிலையில், கடந்த வாரம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இனி அத்துறையில் பணிகள் வேகமெடுக்கும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்த்திற்குள் அதாவது அடுத்து வரும் 17 மாதங்களில் குறைந்தது 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி இலக்கு நிர்ணயித்தாக சொல்லப்படுகிறது. எனினும், காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக பல்வேறு அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும், துறை வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், கடந்த காலங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அதிக காலதாமதமாவதாக டிஎன்பிஎஸ்சி  மீது பலமான குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், தற்போது அதுபோல் தாமதமில்லாமல் மிக விரைவாக வெளியிடவும் அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தொடர்பாக எப்படி அட்டவணை வருகிறதோ, அதுபோல் அட்டவணையும், அதன்படி தேர்வுகளும், தேர்வு முடிவுகளும், சரியாக வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி நடந்தால் அரசு பணியில் சேர விரும்பும் பலர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். 

தற்போதைய நிலையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்னும் இருவாரங்களில் அதாவது செப்டம்பர் மாதம் 14-ந் தேதி 2,327 பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வும், அக்டோபர் மாதம் 14-ந் தேதி 654 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வும், நவம்பர் மாதம் 9-ந் தேதி 861 பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப துறை பணியிட தேர்வுகளும், அதே மாதம் 18-ந் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்கள் தேர்வும், டிசம்பர் மாதம் 14-ந் தேதி குற்ற வழக்கு தொடர்பு துறை பணியிடங்களுக்கான தேர்வும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி குரூப்-5ஏ தேர்வும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்வும் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்படப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved