🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விண்வெளி வினோதங்கள் - எதிர்திசையில் சுற்றும் நிலா!

சூரிய குடும்பத்தில் கணிதம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் எனும் பெருமை நெப்டியூனுக்கு உண்டு.  சூரியனிலிருந்து மிக தொலைவில் உள்ள கிரகம் நெப்டியூன். வெறும் கண்களால் ஏழு கிரகங்களை பார்க்க முடியும். ஆனால் நெப்டியூனை வெறும் கண்ணால் பார்க்க இயலாது. டெலெஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டபின் கண்டறியபட்ட முதல் கிரகம் நெப்டியூனுக்கு அருகிலுள்ள யுரேனஸ்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கூச் ஆடம்ஸ் யுரேனஸ் கோளின் சுற்றுப்பாதையை ஆராய்ந்துகொண்டிருந்தார். யுரேனஸ் தனது பாதையில் ஒரே சீராகச் செல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகத் தெரிந்தது. உடனே தன் கவனத்தை அதில் செலுத்தினார். அப்போதுதான் யுரேனஸுக்கு அப்பால் ஒரு கோள் இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

1845ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் வான் ஆராய்ச்சிக்கூடத்தின் இயக்குநரிடம் சென்று, புதிய கோள் ஒன்று தென்படுவதைக் காட்டினார். அவர் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கிலாந்தின் பிரபல வானவியல் விஞ்ஞானியிடமும் விஷயத்தைச் சொன்னார். அவரும் இளம் ஜான் கூச் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. இப்படிப் புதிய கோள் கண்டுபிடித்த பெருமையை இங்கிலாந்து தவறவிட்டுவிட்டது.

ஜான் கூச் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அதே நேரம், பிரான்ஸ் நாட்டில் உர்பன் லே வெரியரும் யுரேனஸ் தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து, யுரேனஸுக்கு அப்பால் புதிய கோள் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தார். ஆடம்ஸ் புதிய கோளைக் கண்டுபிடித்த விஷயம் அவருக்குத் தெரியாது.

லே வெரியர் கூறுவது சரிதானா என்று உறுதிப்படுத்துமாறு இங்கிலாந்து நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அப்போதும் இங்கிலாந்து ஆர்வம் காட்டவில்லை. எனவே, ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது பிரான்ஸ்.

1846 செப்டம்பர் 23 அன்று தொலைநோக்கி மூலம் வானை ஆராய்ந்து, புதிய கோள் இருப்பதை ஜெர்மனி உறுதி செய்தது. ஜான் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகிய இருவரும் கண்டுபிடித்த கோளுக்கு நெப்டியூன் (Neptune) என்று ரோமானியக் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.

நெப்டியூனைக் கண்டுபிடித்த பெருமை யாருக்குச் சொந்தம் என்பதில் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே சண்டை வந்தது. இறுதியில் ஜான் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகிய இருவருக்குமே இந்தப் பெருமை உரியது என்று முடிவு செய்யப்பட்டது.

1613 லேயே நெப்டியூன் கலிலியோ கலிலியால் கவனிக்கப்பட்டது. ஆனால் அது ஒரு நட்சத்திரம் என்று அவர் நினைத்தார், அதை மேலும் ஆராய்ச்சி செய்ய விரும்பியபோது ​​​​கோளின் இயக்கம் மீண்டும் கண்டறிய முடியாத அளவுக்கு மிகக் குறைவாகத் தொடங்கியது. இதனால் கலிலியோ கலிலியால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டபின்பு மேலும் பரபரப்பு கூடியது. புதிய கிரகம் இருந்தால் அதற்கு நிலவு இருக்கவேண்டுமே? அதை கண்டுபிடித்தால் வரலாற்றில் இடம் பெற்றுவிடலாம். உலகின் தொலைநோக்கிகள் எல்லாம் நெப்டியூனை நோக்கி குவிய, நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட 17வது நாளில் வில்லியல் லாஸெல் எனும் ப்ரிட்டிஷ் வானவியலாளர் நெப்டியூனின் மிகப்பெரும் நிலவான ட்ரைடன் (Triton)-ஐ கண்டுபிடித்தார்.

நெப்டியூனைச் சுற்றி மொத்தம் 14 நிலவுகள் உள்ளன. அவை அனைத்தும் கிரேக்க புராணங்களில் நீர் தெய்வங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவற்றை வழக்கமான, ஒழுங்கற்ற மற்றும் அசாதாரண ஒழுங்கற்ற நிலவுகளாக பிரிக்கலாம்.

வழக்கமான நிலவுகள்- அனைத்து 14 நிலவுகளிலும், 7 உள் வழக்கமான நிலவுகள் ஆகும், அதாவது அவை நெப்டியூனின் கிரகணத்தில் வட்ட சுற்றுப் பாதைகள் அல்லது குறைந்த விசித்திரமான சுற்றுப்பாதைகளுடன் சுற்றுகின்றன. நெப்டியூனிலிருந்து அவை இருக்கும் தூரத்தின் வரிசையில், அவை நயாட், தலசா, டெஸ்பினா, லாரிசா, ஹிப்போகாம்ப் மற்றும் புரோட்டியஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.

ஒழுங்கற்ற நிலவுகள் - மீதமுள்ள 7 நிலவுகள் ஒழுங்கற்ற நிலவுகள். அவை சாய்வான, விசித்திரமான மற்றும் பிற்போக்கு சுற்றுப்பாதையைப் பின்பற்றுகின்றன. அவற்றின் தூரத்தின் வரிசையில், அவை ட்ரைடன், நெரீட், ஹலிமேட், சாவோ, லாமெடியா, சாமந்தே மற்றும் நெசோ என வகைப்படுத்தப்படுகின்றன.

இதில் ட்ரைடன் மட்டும் வானவியலாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அது என்னவெனில், பெரும்பாலான நிலவுகள் தங்கள் கிரகத்தை சுற்றி அதே திசையில் சுழலும்போது, ட்ரைடன் மட்டும் நெப்டியூனை எதிர் திசையில் சுழல்கிறது. இது ஒரு தலைகீழ் சுழற்பு எனப்படுகிறது. வேறு எந்த நிலாவுக்கும் இல்லாத இந்த தலைகீழ் சுற்றுமுறை ட்ரைடனுக்கு மட்டும் ஏன் என விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

நெப்டியூனுக்கு மற்ற நிலவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை எல்லாம் நேர் திசையில் நெப்டியூனுடன் இணைந்து சுற்றுகையில் ட்ரைடன் மற்றும் எதிர்திசையில் சுற்றுவது ஏன்?

ப்ளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டபின் மேலும் ஒரு விந்தை புலப்பட்டது. 

ப்ளூட்டோவும், ட்ரைடனும் ஒரே மாதிரி இருந்தன. 2024ம் ஆண்டில் இரண்டிலும் நடத்தபட்ட வேதியல் ஆய்வுகள் இரண்டும் ஒரே மாதிரி வேதித்தன்மையை கொண்டிருப்பதாக கூறின. இதன்பின் பின்வரும் கருதுகோளை முன்வைத்தார்கள்.

ப்ளூட்டோ இருக்குமிடம் குய்ப்பர் பெல்ட். அங்கே ஏராளமான குறுங்கோள்கள் உள்ளன. அதில் ஒரு குறுங்கோளாக ட்ரைடன் இருந்தது. சூரியனை அது சுற்றுகையில், இன்னொரு குறுங்கோளின் பாதையில் செல்ல, அது ட்ரைடன் சூரிய குடும்பத்தின் உள்பகுதியை நோக்கி தள்ளியது. நெப்டியூனை நெருங்குகையில், ட்ரைடன் நெப்டியூனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, எதிர்த்சையில் இருந்து வந்ததால், அதை எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்தது. 

ட்ரைடன் முழுக்க கடும்குளிர். வாயேஜர் 2 அதன் அருகே செல்லும்வரை, அது உறைந்த, இறந்து போன நிலவாக தான் கருதபட்டது. ஆனால் வாயேஜர் 2 அதன் அருகே சென்றதும் பேரதிர்ச்சி. அதன் உறைந்த மேற்பரப்பில் ஆங்காங்கே மிகப்பெரும் நீரூற்றுகள் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தன. 

ட்ரைடன் 45% தண்ணிர் நிரம்பிய கடல் இருப்பதாகவும், மேற்பரப்பு கடும் குளிரால் உறைந்திருந்தாலும், நெப்டியூனின் ஈர்ப்பு விசையால் அது இழுக்கபடுவதால், பனிக்கு அடியே வெப்பம் உண்டாகி, அங்கே தண்ணீர் நிரம்பிய கடல் இருப்பதாகவும், மேற்பரப்பை துளைத்துக்கொண்டு, நீர் ஊற்றாக அடிக்கபடுவதாகவும் கூறுகிறார்கள்.

தன்ணீர் கடல் இருப்பதால் அதனுள் உயிர்கள் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜூபிடரின் நிலவான யுரோபாவிலும் இதே போல மிகப்பெரும் தண்ணீர் நிரம்பிய சமுத்திரம் உள்ளது. அதன் அடியிலும் இதே போல கடல்வாழி உயிரினங்கள், பாக்டிரியா ஆகியவை இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved