லயன்ஸ் கிளப் தலைவராக திரு.சீனிவாசன் தேர்வு - தலைவர்கள் வாழ்த்து.
கோவை மாவட்டம் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் என்.சீனிவாசன். பொதுவாழ்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான சீனிவாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்கழக செயலாளராகவும், அரவக்குறிச்சி ஒன்றிய அவைத்தலைவராகவும், கோவை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராகவும் பொறுப்புவகித்துள்ளார். மேலும், 1996-இல் குளத்துப்பாளையம் பேரூராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு 2001 வரை சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
எஸ்.எஸ்.பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வரும் சீனிவாசன், தொழில், அரசியல், சமூகம், சமுதாயம் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செய்துவருகிறார். அந்த வகையில் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயமுத்தூர் பட்டீஸ்வரா-வில் இணைந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சமூகப்பணியாற்றி வருகிறார். ரத்ததானம், உடல் உறுப்பு தானம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றில் அதிக பங்காற்றிவரும் சீனிவாசனுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த சமூகசேவருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மம்மோகிராஃபி டெஸ்டிங் யூனிட் (Mammography Testing Unit) மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 1.50 கோடி மதிப்பில் நடமாடும் பரிசோதனை பேருந்தை இலவசமாக இவர் சார்ந்த லயன்ஸ் கிளப் வழங்கியதில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (26.09.2024) நடந்த நிகழ்வில் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயமுத்தூர் பட்டீஸ்வரா-வின் தலைவராக என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து என்.சீனிவாசனுக்கு சமுதாய தலைவர்களும், லயன்ஸ் கிளப் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஓராண்டு காலம் தலைவராக பணியாற்ற உள்ள சீனிவாசன் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கி செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகள் வரை அரிமா செயல்பாடுகளில் ஈச்சனாரி ஊர் நாயக்கர் திரு.முத்துசாமி, அரிமா முருகேசபாண்டியன் உள்ளிட்ட ஒருசில கம்பளத்தார்கள் பெயர்கள் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டுவந்த நிலியயில் சமீப காலமாக நமது சமுதாயத்தினர் அரிமா சங்க நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது திரு.என்.சீனிவாசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குறியது. அவரது பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.