🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புரட்சிப்புயலும், இளந்தென்றலும் கயத்தாரில் சங்கநாதம்!

இந்திய விடுதலைக்காக முதல் முழுக்கமிட்டு தூக்குமேடையேறிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவுநாளையொட்டி கயத்தாரில் இன்று (16.10.2024) மாலை 5 மணியளவில் எழுச்சியுரையாற்றுகிறார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ. இதன் விபரம் வருமாறு,

பிறந்த நாள், நினைவு நாள் என இருதினங்களிலும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிறப்பு செய்து அவரது புகழ்பாடி மகிழ்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் தலைவரும் சந்தித்திராத தேர்தல் தோல்வி, பழிச்சொல், அவச்சொல், அவதூறு, விமர்சனம் என அனைத்தையும் கடந்து "தன் பணி மக்கள் பணி செய்துகிடப்பதே" என பயணித்து வருபவர் வைகோ.

அதேபோல், பாஞ்சை மண் குறித்து அரசியல் அரங்கில் எத்தனையோ அவதூறுகளும், புரளிகளும் அவிழ்த்துவிடப்பட்டாலும், அதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் தோளில் போட்ட கருப்புத்துண்டையும், பாஞ்சை மண்ணில் கால்தடம் பதிப்பதையும் விட்டுவிடாத கொள்கை உறுதி கொண்ட ஒரே அரசியல் தலைவர் வைகோ. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்தையும், மாமன்னரின் போர்க்குணத்தையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எழுச்சியுரையாற்றி, உண்மை வரலாற்றை உலகுக்கு கொண்டு சேர்த்த உத்தம தலைவர் புரட்சிப்புயல் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் கயத்தாறு மண்ணில் வீரமுழக்கமிடும் வைகோ அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நீண்ட நேரம் பேசுவதை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் கயத்தாறு வந்துவிட்டால் சிலநிமிடமே பேசினாலும் அதே கம்பீரத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்துவது அவரை அறியாமலே வந்துவிடுவது அம்மண்ணுக்கும், அவருக்குமான இயல்பான பிணைப்பு.


இந்நிலையில், மாவீரன் கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளையொட்டி கே.எஸ்.குட்டி அறக்கட்டளை சார்பாக கயத்தாறு மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகழஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வீர உரையாற்ற ஒப்புக்கொண்டுள்ளார் வைகோ. வானத்தில் கருமேகங்கள் தமிழகத்தை சூழ்ந்துள்ள இவ்வேளையில் கயத்தாரில் இடியென முழங்க வாழும் கட்டபொம்மன் வைகோ வருகிறார் என்பதறிந்து கம்பளத்துச் சொந்தகள் பூரித்துப்போயுள்ளனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் இளந்தலைவர் துரைவைகோ எம்.பி அவர்களும் புகழஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்வது, கயத்தாறில் கம்பளத்தாருக்கு அக்டோபர் 16-இல் தீபாவளி வந்ததுபோல். பெருவெடிப்பும், தென்றலும் ஒன்றுகூடும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கம்பளத்தார் படை கயத்தாறு நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. 

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! ஓங்கட்டும் கட்டபொம்மன் புகழ்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved