🔴 LIVE | முப்பெரும் விழா 2023


Dr.அப்துல்கலாம் விருதுபெற்ற மருத்துவர் பொம்முசாமி-க்கு வாழ்த்துகள்!

திருப்பூர் செஸ்ட் & மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் டாக்டர் கே. பொம்முசாமி. இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி தனியார் நிறுவனமொன்று தனது 24-வது ஆண்டுவிழாவில் இந்த ஆண்டுக்கான டாக்டர் அப்துல்கலாம் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் எளிய விவசாயக்குடும்பத்தில்  பிறந்தவர் பொம்முசாமி. மருத்துவக் கனவோடு கல்வி பயின்று மருத்துவராகி தனது கனவை நனவாக்கியதோடு, திருப்பூர் மாநகரில் சிறந்த மருத்துவராகப் பெயரெடுத்துள்ளார். நுரையீரல் துறையில் கைராசி மருத்துராகப் பார்க்கப்படும் பொம்முசாமி திருப்பூர் செஸ்ட் & மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காச நோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது. பெரும்பாலனவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.


எனவே, இந்நோயிலிருந்து மக்களைக்காப்பதற்காக சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு நாடும் செயல்பட்டுவருகிறது. அதோல் இந்தியாவில், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம், தமிழ்நாடு அரசு காசநோய் ஒழிப்புத்திட்டம் என்ற பெயர்களில் காசநோயை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும், இந்நோயை கட்டுப்படுத்துதலிலும், குணப்படுத்துதலிலும் அரசுக்கு இணையாக தனியார் மருத்துவர்களும் பெரும்பங்காற்றி வருகின்றனர். அந்தவகையில், மிகத்தீவிரமான காசநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அவர்களை பூரண குணமடையச் செய்ததற்காக தமிழக அரசு சார்பில் பாராட்டப்பட்டவர் மருத்துவர் பொம்முசாமி. கொரோனோ பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் மருத்துவர் பொம்முசாமியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், திருப்பூர் மாநகரில் செயல்பட்டு வரும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் அமைப்பின் 24-வது ஆண்டு விழாவையொட்டி நடத்திய முப்பெரும் விழாவில் மருத்துவர் கே.பொம்முசாமி அவர்களின் மருத்துவ பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான டாக்டர் அப்துல்கலாம் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருதுபெற்றவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவருமான சக்திவேல் அவர்கள் இவ்விருதினை பொம்முசாமிக்கு வழங்கினார்.  மேலும், மருத்துவர் பொம்முசாமி திருப்பூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஐஎம்ஏ டெக்ஸ் சிட்டி சங்கத்தின் ஆலோசகராக பல்வேறு சமூகப்பணிகளைச் செய்துவருகிறார்.

டாக்டர் அப்துல்கலாம் விருதுபெற்ற மருத்துவர் கே.பொம்முசாமி-க்கு நமது வாழ்த்துகள்!


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved