தமிழக அமைச்சருக்கு நேரில் நன்றி!
மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை சந்தித்து வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு,
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவுநாள் கடந்த அக்டோபர் 16-இல் அனுசரிக்கப்பட்டது. வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் இன்னுயிர் துறந்து இந்திய சுதந்திரப்போராட்டத்தை தென்கோடியில் தொடங்கிவைத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் தலைநகர் சென்னையில் கட்டபொம்மனாருக்கு ஆளுயர சிலைவைக்கவேண்டுமென்பது தமிழகத்தில் வாளும் 40-லட்சம் கம்பளத்தாரின் ஒற்றைக்கோரிக்கையாக நீண்டநாட்களாக இருந்துவந்தது. இக்கோரிக்கையை 2021-இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவீரனது நினைவுநாளில் தமிழக அரசு சார்பில் அனுசரிக்க நிரந்தர நிலையாணை பிறப்பித்து கௌரவிக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மூலமாக வைக்கப்பட்ட இக்கோரிக்கையை கொள்கையளவில் உடனடியாக ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கடந்த அக்டோர் 16 அன்று மூன்று அமைச்சர் பெருமக்களையும், மாநகர மேயர் மற்றும் துணைமேயர், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அடங்கிய குழுவினரை அனுப்பிவைத்து கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வழிவகை செய்திருந்தார். இதனால் மாவீரனின் 225-வது நினைவுரனநாள் வரலாற்றுச்சிறப்புமிக்க நாளாக அமைந்தது.
நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக செயல்படுத்திட உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விருதுநகரிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்று (20.11.2024) சந்தித்து தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்தார்.
இந்த சந்திப்பின்போது துணைத்தலைவர் ஆர்.பெருமாள், நன்கொடையாளர்கள் மகேஷ்வரன், வைகுந்த் ஆகியோர் உடனிருந்தனர்.