அஇஅதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக ஜி.மோகன் நியமனம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன. பிரதான கட்சிகள் தங்கள் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளை தங்கள் வயப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், உட்கட்சியிலும் மாற்றங்களை செய்துவருவதோடு, களந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த இன்றைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வும் அமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக முக்கிய தலைவர்களுக்கு அக்கட்சியின் துணை அமைப்புகளில் உரிய பொறுப்புகள் வழங்கி கட்சிப்பணியை வேகப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வரதராஜன் அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அக்கட்சியிலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராக என்.ஜெகவீரபுரம் ஜி.மோகன் DCA அவர்களிய நியமித்து உத்தரவிட்டுள்ள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி.
இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் தலைவரான ஜி.மோகன், தனது கல்லூரிப்படிப்பிற்குப்பின் வெளிநாட்டில் சில காலம் பணியாற்றிவிட்டு, ஓரிரு வருடங்களுக்கு முன் தாயகம் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சுயதொழில் செய்துவருபவர், சமுதாயப்பற்று மிக்க ஆற்றல் வீரர். புதூர் வட்டார இராஜகம்பளத்தார் சமுதாயம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதில் முக்கியப்பங்காற்றிவரும் மோகன் அவர்கள், நமது சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட முப்பெரும்விழாவிற்கு பெருமளவு உதவிகரமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.மோகன் அவர்களை மாவட்ட அளவிலான தலைமைப்பதவி வழங்கி கௌரவித்துள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களுக்கும், பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் இராஜு அவர்களுக்கும், விளாத்திக்குளம் மு.சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்களுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.