குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் நால்வர் வெற்றி - கட்டபொம்மன் அகாடமிக்கு மற்றுமொரு மணிமகுடம்!
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்டது. குரூப் 2 தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
தமிழகத்தில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் என பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இத் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 5,81 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
முதல்நிலை தேர்வுக்கு (Prelims) விண்ணப்பித்தவர்கள் தேர்வெழுதுவதற்கு ஏதுவாக 38 மாவட்டங்களில் 2763 தேர்வு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்தன. குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 720 பணியிடங்களும், குரூப் 2ஏ-வில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,540 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (12.12.2024) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் கட்டபொம்மன் அகாடமி சார்பில் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நான்கு வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டபொம்மன் அகாடமி- யின் (2023-24 கல்வியாண்டு) முதலாமாண்டு மாணவர்களான தேனி மாவட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த (1). என்.கோபாலகிருஷ்ணன் B.E., சேலம் மாவட்டம், திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த (2). பழனிவேல் B.E., (3), கனகா பெருமாள் ஆகியோர் குரூப் 2A முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அதேபோல் 2024-25 கல்வியாண்டில் கட்டபொம்மன் அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்றுவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி.நிஷிந்தா-வும் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திருமதி.கனகா பெருமாள் ஏற்கனவே குரூப்4 தேர்வில் வெற்றிபெற்று வனக்காப்பாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான முதன்மைத்தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்பதை தேர்வாணையம் உறுதி செய்துள்ள நிலையில், தேர்வான நால்வருக்கும் முத்ன்மைத் தேர்வை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் தலைசிறந்த பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில், சமுதாய மக்களால் உருவாக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமி-யின் முதல் முயற்சிலேயே குரூப்2 தேர்வில் மூவர் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் குரூப்4 தேர்வில் வென்று கட்டபொம்மன் அகாடமியின் முதல் வெற்றியை கனகா தொடங்கி வைத்திருந்த நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் நால்வர் வெற்றிபெற்றிருப்பது கட்டபொம்மன் அகாடமிக்கு மேலும் ஒரு மணிமகுடம். இந்த வெற்றியை இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பதாகவும், இனி வருங்காலங்களில் யுபிஎஸ்சி, வங்கித்தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளுக்கும் இராஜகம்பளத்து இளைய சமுதாயத்தை தயார் செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.