மு.பிரதமர் மாமேதை மன்மோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

1990-களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தபோது நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்து மன்மோகன்சிங் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கை காரணமாக தேசத்தை பொருளாதரச்சரிவிலிருந்து காத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளை விட இந்தியாவின் தேவைகளை அறிந்து செயல்படும் பொருளாதார சீர்திருத்தவாதியாக மன்மோகன்சிங் பார்க்கப்படுகிறார்.
நாட்டின் முதல் சீக்கியப் பிரதமர் என்ற பெருமைக்குறியவர் மன்மோகன் சிங். 2004-2014 வரை இரண்டு முறை பிரதமராக அதாவது 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். 1952 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த மன்மோகன் சிங், அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1957 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் முடித்தார். 1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் D Phil பட்டம் பெற்றார்.
1932 செப்டம்பர்'26 இல் பஞ்சாபில் உள்ள காஹ் (இப்போது பஞ்சாப், பாகிஸ்தான்) ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் 1947-48 இல், குடும்பம் அமிர்தசரஸுக்கு குடிபெயர்ந்தது.
நூறுநாள் வேலைத்திட்டம், தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் போன்றவை மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டங்களாகும்.
தான் வகித்த அனைத்து பதவிகளிலும் தனிமுத்திரை பதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து, தேசத்தை பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.