மருத்துவச்செம்மல் விருது வென்ற பொம்முசாமிக்கு வாழ்த்துகள்!

மருத்துவச்செம்மல் விருது வென்ற பொம்முசாமிக்கு வாழ்த்துகள்!
திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பொம்முசாமி அவர்களுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான வசந்த் டிவி மருத்துவச்செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமியை பாராட்டினர். இதன் விவரம் வருமாறு,
திருப்பூர் மாநகரில் மருத்துவச்சேவைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அவசர மருத்துவப்பிரிவுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமையப்பெற்றுள்ள இம்மருத்துவமனை, குறைந்த செலவில் நுரையீரல், சுவாசக்கோளாரு மற்றும் இருதய நோய்களுக்கும் சிகிச்சை வழங்கி வருகிறது. மேலும், கிராமப்புற எளிய மக்களுக்கு தரமான உயர் சிகிச்சை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இம்மருத்துவமனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களைத்தேடி மருத்துவத்தைக் கொண்டுசேர்ப்பதில் முன்னோடி மருத்துவராக் இருந்துவரும் பொம்முசாமி அவர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனது திருப்பூர் செஸ்ட் மருத்துவமனை சார்பில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். இதற்காக மருத்துவர் பொம்முசாமிக்கு தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியான வசந்த் டிவி மருத்துவர் பொம்முசாமிக்கு மருத்துவச்செம்மல் விருது வழங்கியுள்ளது. கடந்த வாரம் திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை மன்னன் மதுரை முத்து மருத்துவர் பொம்முசாமிக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் திருப்பூர் மாநகர துணைமேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், விகாஸ் வித்யாலயா கல்விக்குழுமத் தலைவர் ஆண்டவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமியை வாழ்த்திப்பேசினர்.