மாமன்னுருக்கு மதுரையில் அமைச்சர் பெருமக்கள் மரியாதை!

இந்திய விடுதலைக்கு
முதல்முழக்கமிட்டு இன்னுயிர் துறந்த பாஞ்சைப்பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின்
266-வது பிறந்தநாள் விழா நாளை 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாட நாடுமுழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், மதுரையில் அமைந்துள்ள மாவீர் திலகம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருமாறு சமுதாயத்தின் மூத்த தலைவர்களான நல்லாசிரியர் சங்கரவேலு, திமுக பிரமுகர் வை.மலைராஜன், தொழிலதிபர் எஸ்.பி.கிருஷ்ணன், புலிநாயக்கர், தங்கப்பாண்டியன், சந்திரபாபு உள்ளிட்டோர் மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் திரு,தங்கம் தென்னரசு ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
சமுதாயத் தலைவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பெருமக்கள், ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் 3-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு மாவீரன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.
மாண்புமிகு
அமைச்சர் பெருமக்கள் மாமன்னருக்கு மரியாதை செலுத்தவரும் நிகழ்வில். சமுதாய உறவுகள் பெருமளவில்
கலந்துகொண்டு நமது ஒற்றுமையையும், வலிமையையும் உலகுக்கு பறைச்சாற்றுவோம் என்று தலைவர்கள்
அழைப்பு விடுத்துள்ளனர்.