வணிகர் சங்கங்களின் பேரவை தலைவராக எஸ்.கார்த்திகேயன் நியமனம்!

தமிழ்நாட்டில் வணிகர்களுக்காக, வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து சமீபத்தில் மறைந்த த. வெள்ளையன் அவர்களால் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை. இதன் தற்போதைய தலைவராக த.வெள்ளையன் அவர்களின் மகன் டையமண்ட் ராஜா இருந்து வருகிறார். தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பரவியுள்ள, மிக வலிமையான சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
இப்பேரவையின் கீழ் இயங்கும் தென்சென்னை மேற்கு மாவட்டம், போரூர்-காரம்பாக்கம் வியாபாரிகள் சங்கத்தலைவராக சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தைச் சேர்ந்த S.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ஊசிமேசியாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திகேயன் அவர்கள் சென்னை போரூரில் SKDA எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் கட்டுமானப் பொருட்கள் வியாபாரமும், பால் விற்பனையகமும் நடத்தி வருகிறார்.
மேலும், அதிமுகவின் தீவிரமாக செயல்பட்டு வரும் கார்த்திகேயன் அக்கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக மாணவரணி இணைச்செயலாளராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தின் மீதும் தீவிர பற்றுக்கொண்ட கார்த்திகேயன், வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்திய முப்பெரும்விழாவில் முக்கியப்பங்கு வகித்தவர். வியாபாரிகள் சங்கத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திகேயனுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.