🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மணிவாசகனாரின் மைந்தனுக்கு மற்றுமொரு மணிமகுடம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீவிநாயக குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குநரும், பிரபல தொழிலதிபரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.மணிவாசகன் அவர்களின் மகனும் இளம் வழக்கறிஞருமான எம்.கங்காதரன் அவர்களை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,


விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியைச் சேர்ந்த முன்னாள் தலைமையாசிரியர் மறைந்த  முத்து அவர்களின் பெயரன் எம்.கங்காதரன். தஞ்சாவூரிலுள்ள சாஸ்த்ரா சட்டப்பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 2017-இல் B.A., LL.B., பட்டம்பெற்றார். அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மூத்த வழக்கறிஞர் மாதவன் அவர்களிடம் ஜூனியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2021-இல் தமிழகத்தில் அமைந்த திமுக தலைமையிலான அரசு, தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (சிப்காட்) வழக்குகளில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞராக கங்காதரன் அவர்களை நியமித்து 2022-இல் உத்தரவிட்டது. அன்றிலிருந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் சிப்காட் வழக்குகளில் ஆஜராகிவந்த கங்காதரன், மதுரையில் தங்கியிருந்து பல்வேறு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலும் ஆஜராகிவருகிறார்.   


இந்நிலையில், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் முதல்தலைமுறை தொழிலதிபர்கள், மருத்துவம், நீதி மற்றும் நிர்வாகத்துறை ஆளுமைகளில் ஒருவராக வழக்கறிஞர் கங்காதரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, "முன்னத்தி ஏர் - வழிகாட்டும் தலைமுறை விருது" கடந்த சனிக்கிழமை (08.02.2025) அன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


முன்னத்தி ஏர் - வழிகாட்டும் தலைமுறை விருது பெற்ற கங்காதரனுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக தமிழக அரசின் உயர்நீதிமன்ற உரிமையியல் வழக்கறிஞராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து 2025'பிப்ரவரி 10-ஆம் தேதியில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவற்றில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் உத்தரவின்படி, மதுரை உயர்நீதிமன்றத்தில் உரிமையில் (சிவில்) சம்மந்தப்பட்ட வழக்குகளில்  எம்.கங்காதரன் தமிழக அரசின் வழக்கறிஞராக ஆஜராகி வழக்காடுவார். இராஜகம்பளத்தார் சமுதாயத்திலிருந்து முதல்முறையாக மிக இளம் வயதில் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள கங்காதரனுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   


செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும், திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே தனது தனித்துவமான திறையால் வழக்கறிஞர் வாழ்வில் வெற்றிவாகை சூடி, முத்திரை பதித்துவரும் கங்காதரன் அவர்கள், கம்பளத்தார் சமுதாய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக மட்டுமல்லாமல் "முன்னத்தி ஏர் - வழிகாட்டும் தலைமுறை"க்கான சரியான தேர்வு என்பதையும் மெய்ப்பித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved