தன்னலமற்ற சேவைக்காக முதல்வரின் விருதுவென்ற முதல் கம்பளத்தார்!

புவி வெப்பமயமாதலின் விளைவாக ஏற்படக்கூடிய நாசகர ஆபத்துகளைப் புரிந்துகொண்ட மனித சமூகம் புவிக்கோளத்தையும் அதன் இயற்கையையும் காப்பாற்றும் நோக்கில் சுற்றுச்சூழல் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாட ஐநா பொதுசபையால் தீர்மானிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
இந்த (2025) ஆண்டுக்கான கருப்பொருளாக ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Polution) என்ற முழக்கத்தை ஐநா பொதுச்சபை அறிவித்து உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சுற்றுச்சூழல், காற்று மாசுபாடு, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், தண்ணீர் மாசுபாடி குறித்த விழிப்புணர்வு மக்களிடை அதிகமாக உள்ளது. இதற்கு தமிழக அரசும், தன்னார்வலர்களும் தொடர்ந்து பிரச்சார இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்வதே முக்கியக்காரணம். அந்தவகையில் சுற்றுச்சூழலல், லஞ்ச ஒழிப்பு, ஆக்கிரமிப்பு, தேர்தல் செலவினங்களைக் குறைத்தல் என பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள சமூக செயற்பாட்டாளரான காந்தியவாதி ரமேஷ், நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும் அதிக அக்கரை கொண்டவர். நாமக்கல்லை பூர்வீகமாகக் கொண்ட காந்தியவாதி ரமேஷ் சாமானிய மக்களின் குரலாக அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருபவர்.
தனது தொடர்ச்சியான சமூக செயல்பாடுகளாளும், காந்திய உடையாளும் தனித்துவ அடையாளத்தோடு வலம் வருபவர். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்காக பலமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் காந்தியகாதி ரமேஷ். சுற்றுச்சூழல் குறித்தான ராமேஷின் செயல்கல் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றன. இந்நிலையில் நீர் மேலாண்மை குறித்த ரமேஷின் செயல்பாட்டிற்காக தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான முதல்வரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதை ரமேஷ் அவர்கள் பெற்றுள்ளார். உலகச்சுற்றுச்சுழல் தினமான ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் சுற்றுச்சூழல்துறை செயலாளர் சுப்ரியா சுலேவிடமிருந்து இந்தப்பரிசை ரமேஷ் பெற்றார். இவ்விருதோடு ரூபாய் ஒரு லட்சம் வெகுமதியும் காந்தியவாதி ரமேஷ்க்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும்முதலமைச்சரின் நீர்நிலைப்பாதுகாவலர் விருதுவென்ற காந்தியவாதி ரமேசுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் நேற்று (15.06.2025) பாராட்டு விழா நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நிர்வாகிகள் ரமேஷிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.