ஐடி துறையில் அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை ஆபத்து!

உலகம் முழுவதும் ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருவது ஒரு எதார்த்த உண்மைதான். இதற்கான முக்கிய காரணிகளை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
(1). மறைந்து வரும் Y குரோமோசோம்.
(2). மரபணு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்.
(3). புகைபிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்தல்.
(4). மன அழுத்தம்; அல்லது ஹைப்போ ஹைப்பர் தெர்மியா வின் வெளிப்பாடு.
(5). எக்ஸ்-கதிர்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள்.
(6). தாம்பத்தியத்தின் போதாமை.
(7) அமர்ந்தே வேலைபார்ப்பது, அதை ஈடுசெய்ய உடற்பயிற்சி இல்லாமை.
(8). குடும்பம், பற்றாக்குறை, கடன் மற்றும் சமூக அழுத்தம்.
(9) குழந்தைப் பருவத்தில் எதிர் கொள்ளும் வன்முறைகள் மற்றும் பெற்றோர் நடவடிக்கைகள்.
(10) ஓரினச் சேர்க்கை.
(11) ஒரே மாதிரியான இன்பம் துயித்தலால் ஏற்படுத்தும் சோர்வு.
என ஆண்மைக் குறைவிற்கான காரணங்களை வகைப் படுத்துகிறார்கள். மேலும் அவர்கள், சில வகை நோய்களுக்குக் கொடுக்கும் மருந்துகள், நாளமில்லா சுரப்பிகளை சிதைக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அப்படியான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதும் ஆண்மைக் குறைவிற்கு காரணமாக அமைகிறது.
சில அபாயகரமான மருத்ததுகள் (EDCs) நாளமில்லா சுரப்பிகள் மண்டலத்தைத் தாக்கும் போது, இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும். இதுவும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, பாலியல் ரீதியாக, சுறு சுறுப்பான, நல்ல ஆரோக்கியமான உடலுறவு கொள்ளும் தம்பதிகள், ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் அடையாவிட்டால், இதைத்தான் மலட்டுத் தன்மை என WHO வரையறுக்கிறது.
பொதுவாக, இன்றய வாழ்வியல் சூழலில், சுமார் 25% தம்பதிகள் 1 வருடத்திற்குள் கர்ப்பம் தரிப்பதில்லை. அதில் 15% பேர் மட்டும் தான் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். 50% நபர்களை ஆராய்ந்ததில், மலட்டுத்தன்மைக்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள்.
"மதர் கேர்" என்கின்ற இணையத் தளம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை யில், புனே நகரம், வேகமான நகர்ப்புற வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பரபரப்பான நகரம்.
பலர் நீண்ட நேரம் மேசைகளில் அமர்ந்து வேலை செய்கிறார்கள், இதுஉடல் செயல்பாடு இல்லாமைக்கு வழிவகுக்கிறது. உடற்பயிற்சி இல்லாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, கருவுறுதல் உட்பட ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
மேலும், புகைபிடித்தல், மது அருந்து தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற பழக்கங்கள் இப்போது அதிகமாகக் காணப்படுகின்றன, குறிப்பாக நகர்ப்புறங்களில். இந்த பொருட்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை எதிர் மறையாகப் பாதிக்கின்றன். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் இரண்டையும் போதைப் பொருட்கள் சிதைவுக்குள்ளாக்குகிறது.
வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் நகர வாழ்க்கையின் அழுத்தங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன. குறிப்பாக மன அழுத்தம் ஆண்களின் கருவுறுதலில் முக்கியபங்கு வகிக்கும் ஹார்மோன் அளவை பாதிக்கிறது.
அதேப் போல, பல வளர்ந்து வரும் நகரங்களைப் போலவே, புனேவும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்கிறது. காற்றில் உள்ள மாசுபாடுகள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம், விந்தணுக்களின் தரத்தை நேரடியாக பாதிக்கிறது.
குறிப்பாக, புனே போன்ற பகுதிகளில் அசைவ உணவுகள் மீதான ஆன்மீக ரீதியான பாண்பாட்டுத்தாக்கம் மேலோங்கியிருப்பதால், அவர்கள் உண்ணும் உணவு வகைகளில் துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் விந்தணு உற்பத்திக்குத் தேவையான புரதங்கள் மற்றும் முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.
உணவில் சரியான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது இனப்பெருக்க ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது. எனவே இந்தியாவில் ஆண்மையின்மைக்கு, மதமும், மதம் சார்ந்த, உணவுப் பண்பாடும் முக்கியப் பங்காற்றுகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
கொச்சியை தளமாகக் கொண்ட மலட்டுத்தன்மை ஆராய்ச்சி மையமான CIMAR நடத்திய ஆய்வின்படி,
மாறிவரும் வாழ்க்கை முறைகள், அதிகப்படியான மன அழுத்தம், சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், உளவியல் பிரச்சினைகள், இதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மற்றும் மரபணு கோளாறுகள் காரணமாக கேரளாவில் ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது என்று CIMAR அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, ஐடி துறையில் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. முன்பு இருந்ததைவிட கேரளாவில் மலட்டுத் தன்மை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் கூடியிருப்பதாக கண்டு பிடிப்புகள் கூறுகின்றன.
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் உருவ அமைப்பைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு பிரச்சினையும் ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மரபுவழிச் சிக்கல்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. மற்ற அனைத்துக் காரணிகளும் நுகர்வுப் பண்பாடு கொடுத்த கொடைதான்.
இது முழுக்க முழுக்க அரசு மற்றும் அரசியல் மற்றும் நிர்வாகத்தினால் ஏற்படும் வாழ்வியல் அழுத்தங்களால் உருவாக்கப்படுபவைத்தான்.
இது ஒரு புறம் இருக்க, புத்திர பாக்கியம் இல்லை என்றால் சொர்க்கத்தில் புக முடியாது என்றும், கொல்லிப் போட ஆள் இருக்காது என்றும் பரப்பப்பட்டு வரும் மதரீதியான கருத்துக்களுக்கு ஆட்பட்ட மனிதர்கள், ஆண்மையின்மை என்பதை ஒரு கௌரவப் பிரச்சினையாக அணுகக் கூடிய சமூகச் சூழல் இங்கே நிலவுகிறது.
திருமணம் ஆன ஓராண்டிற்குள்ளாகவே, ஏதும் விசேஷமா என்று கேட்கும் பெற்றோர்ளும், உறவினர்களும், சமூகத்தார்களும் உள்ள ஒரு சமூக சூழலில் குழந்தைப் பேரு என்பது முதன்மையாகக் கருதப்படுகிறது.
இந்தப் பொதுச்சமூக உளவியலையும், நிலவிவரும் நிச்சயமற்ற வாழ்க்கை சூழல்களையும் மிகச் சாதுர்யமாகவும், தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சில மருத்துவ வியாபாரிகள்.
இந்த வாழ்வியல் சிக்கலைக் கூட எப்படி பணமாக மாற்ற முடியும் என்கின்ற பெரு முதலாளிகளின் சிந்தனையில் உத்ததுதான், இன்று புற்றீசல்போல் முளைத்து வரும் செயற்கை கருவூட்டல் மைய்யங்கள்.
மனித பலகீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மிக இலகுவாக தீர்க்கக்கூடிய ஒரு மருத்துவச் சிக்கலை, தங்களது லாப நோக்கத்திற்காக, ஆண்மை குறைவு பிரச்சினைக்காக வருபவர்களை பிரமிப்பில் ஆழ்த்தி, புரியாத மருத்துவ சொல்லாடல்களின் மூலம் அவர்களை சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில், இயற்கை நியதிப்படி எந்த உயிரினங்களுக்கும் ஆண்மை குறைவு ஏற்படுமா என்றால், உறுதியாக நாம் சொல்லலாம், எந்த உயிரிகளும் ஆண்மை குறைவோடு பிறப்பதில்லை. இயற்கை அப்படி எந்த உயிரியையும், உருவாக்குவதும் இல்லை.
நன்றி:பெரியார் சரவணன்