தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக ராஜேஷ் குருசாமி நியமனம்!

தமிழக பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத் தலைவராக தொழிலதிபர் ராஜேஷ்குருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு சமுதாயத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்விவரம் பின்வருமாறு,
விருதுநகர் மாவட்டம் எரிச்சனத்தத்தைச் சேர்ந்தவர் இராஜேஷ் குருசாமி. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குரு குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ராஜேஸ் குருசாமி நவீன் விவசாயி என்ற இதழையும் நடத்தி வருகிறார். தனது 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வரும் இராஜேஷ் குருசாமி, அவ்வியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் முக்கிய காரிய கர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பாஜகவின் விவசாய அணி மாநிலச்செயலாராக இருந்துவரும் இராஜேஷ் குருசாமியை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலோடு பாஜக விவசாய அணியின் மாநில துணைத்தலைவராக நியமனம் செய்து விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இராஜேஷ்குருசாமிக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, தொட்டிய நாயக்கர் சமுதாய தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.