180 ஆண்டுகளுக்கு மனிதன் தொலைநோக்கி மூலம் முதல் கோளை கண்டுபிடித்த நாள் இன்று!

இன்றைய நாளான செப்டம்பர் 23, 1846-ம் ஆண்டில் தான் நெப்ட்யூன் கிரகம் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த கண்டுபிடிப்பில் ஒரு தனித்துவம் உள்ளது.
நம் சூரிய மண்டலத்தில் உள்ள மெர்குரி, வீனஸ், (பூமி), மார்ஸ், ஜூபிட்டர் மற்றும் சாட்டர்ன் ஆகிய கோள்களை நம் முன்னோர்கள் வெறும் கண்கள் மூலமாகவே வானத்தை அன்னாந்து பார்த்து கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மிக தொலைவில் இருந்ததால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
1781-ம் ஆண்டு வரை யுரேனஸ் கிரகத்தை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் 'அது ஒரு நட்சத்திரம்' என எண்ணி கண்டுக்காமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் வில்லியம் ஹெர்ஷல் என்ற இசையமைப்பாளர் வாழ்ந்து வந்தார். இசையமைப்பாளராக இருந்தாலும் இவருக்கு வான் நாட்சத்திரங்களை இரவில் வேடிக்கை பார்க்க மிகவும் பிடிக்கும்.
இப்படி ஒரு நாள் தொலைநோக்கி (Telescope) மூலம் வான் நட்சத்திரங்களை பார்த்து வந்தார். இந்த யுரேனஸ் கோளை அவர் பார்த்தபோது அவருக்கு மட்டும் அது வித்தியாசமாக காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதே கோளை அடுத்தடுத்து இரவுகளில் தொடர்ச்சியாக பார்த்தபோது அது தனது உருவத்தை மாற்றிக் கொண்டதால், அது சுழல்வதாகவும், அது நட்சத்திரம் அல்ல. அது ஒரு கோளாக தான் இருக்க முடியும் என உறுதியாக கூறினார். பின்னாட்களில், யுரேனஸ் ஒரு கோள் தான் என நிரூபிக்கப்பட்டது.
ஆக, முதன் முதலாக தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் யுரேனஸ் தான்.
சரி, இதற்கு பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் யுரேனஸ் கிரகத்தை கூர்ந்து கவனித்து வந்தார்கள்.
அப்போது, அவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அது,'சூரிய ஈர்ப்பு விசையை விட வேறு ஏதோ ஒன்று யுரேனஸ்ஸின் சுற்றும் வேகத்தை இழுத்து குறைக்கிறது' என ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
ஒருவேளை 'இழுக்கும் அந்த மர்ம பொருள் ஒரு கோளாக கூட இருக்கலாம்' என எண்ணிய ஆராய்ச்சியாளர்கள், 'அது எவ்வளவு தூரம் இருக்கும்? எவ்வளவு பெரிதாக இருக்கும்?' என அதை கண்ணால் பார்ப்பதற்கு முன்பே ஒரு கணித ஒப்பீடு செய்தார்கள்.
இதன் விளைவாக, 'இவ்வளவு தூரத்தில் ஒரு கோள் நிச்சயம் இருக்க வேண்டும்' என மதிப்பிட்டு, அந்த தொலைவில் தொலைநோக்கியை வைத்து தேடினார்கள். அப்போது கண்ணில் பட்டவன் தான் இந்த நெப்டியூன் கோள்.
செப்டம்பர் 23, 1846-ல் ஜெர்மனியை ஜோஹன் கலி என்பவர் தான் கண்டுபிடித்தார்.
ஆக, நெப்டியூன் கோளை தொலைநோக்கி மூலம் பார்க்காமலேயே கணக்கு மதிப்பீடுகள் மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் நெப்டியூனை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்களால் பார்த்தார்கள்.
இப்படி தனித்துவமாக கண்டுபிடிக்கப்பட்ட கடைசி கோளான நெப்டியூனுக்கு 3 தனிச் சிறப்புகள் உள்ளன.
1. நெப்டியூன் சூரியனை ஒரு முறை சுற்றி வர 165 ஆண்டுகள் ஆகும். ஆக, அங்கே 1 பூமி ஆண்டு என்பது, 165 ஆண்டுகள் ஆகும்.
நமக்கு பூமியில் சராசரியாக 80 முழுமையான ஆண்டுகள் கிடைக்கும். ஆனால், அங்கே மனிதர்கள் வாழ முடிந்தால் அவர்கள் யாருக்கும் ஒரு ஆண்டு கூட முழுமையாக கிடைக்காது.
2. பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஆனால், நெப்டியூனில் 16 மணி நேரம். அவ்வளவு வேகமாக தன்னை தானே சுற்றிக் கொள்கிறது.
3. நம் சூரிய மண்டலத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த வளிமண்டலம் நெப்டியூனில் தான் உள்ளது. இங்கே மணிக்கு 2,100 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது ஒலியின் வேகத்தை விட அதிகம் ஆகும்.
2016-ல் சென்னையை புரட்டி போட்ட வர்தா புயலின் அதிகபட்ச வேகமே மணிக்கு 150 கி.மீ தான். அப்போ, நெப்டியூனில் உள்ள 2,100 கி.மீ வேகத்தை நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா...?
ஆக, இவ்வளவு தனித்துவமான சிறப்பம்சங்கள் கொண்ட நம் சூரிய மண்டலத்தின் கடைசி கிரகமான நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.....இன்று தான் !!
நன்றி : Prakasam P Palani.