பூமி தோன்றியதிலிருந்து அதே அளவு தண்ணீர் - தண்ணீர் ரகசியம்!

நாம் குடிக்கும் தண்ணீரில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா...?
நாம் வசிக்கும் இந்த பூமி 71% தண்ணீராலும், 29% நிலப்பரப்பாலும் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த 71% தண்ணீரானது இந்த பூமி தோன்றியது முதல் அதே அளவிலேயே உள்ளது. இந்த நிலத்தை போலவே பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த தண்ணீர்.
உதாரணத்திற்கு, டைனோசர்கள் காலத்தில் இருந்த அதே தண்ணீர் தான் இப்போதும் நம் வீட்டில் உள்ளது. இந்த பூமிக்கு புதிதாக(Fresh water) எந்த தண்ணீரும் வேறு கிரகத்திலிருந்து வரவில்லை.
டைனோசர் காலத்திலிருந்த அந்த தண்ணீர் ஆவியாக மேலே போனது, மழையாக கீழே வந்தது. பின்னர் இதே தான் திரும்ப திரும்ப நிகழ்ந்தது. இப்போது வரை. இது ஒரு சுழற்சி (Cycle) தானே...?
ஆக, நம்மை சுற்றியுள்ள தண்ணீர் மற்றும் நாம் குடிக்கும் தண்ணீர் எல்லாமே பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
இது ஒரு விஷயம்..
இன்னொரு விஷயம் என்னான்னா....150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்கள் குடித்த அதே தண்ணீரை தான் நாமும் இப்போது குடிக்கிறோம்.
நான் சொன்னது உண்மை தான்...
ஒரு குட்டையில் டைனோசர் வாய் வைத்து தண்ணீரை குடித்தபோது, அதன் தொண்டை வழியாக சென்ற அதே தண்ணீரை தான் நீங்கள் இன்று குடித்தீர்கள்.
எப்படி....?
தண்ணீரில் டிரில்லியன் கணக்கான மூலக்கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக்கூறும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவால் ஆனவை.
சரி, டைனோசர்கள் நூற்றுக்கணக்கான லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கும். இவ்வளவு தண்ணீரை குடித்த பின்னர் அவை சிறுநீர் கழிக்கும்.
நிலத்தில் சேரும் அந்த சிறுநீர் சூரிய ஒளி மூலம் ஆவியாகும். இப்படி ஆவியாகும்போது, சிறுநீரில் கலந்துள்ள அசுத்தமான யூரியா, சால்ட், மினரல்ஸ் என அனைத்தும் கீழேயே தங்கிவிடும். ஏனெனில், இவற்றிற்கு எடை உண்டு என்பதால், ஆவியாகும்போது மேலே செல்ல இயலாது.
ஆனால், சிறுநீரில் உள்ள அந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் மேலே செல்லும். சூரிய ஒளி சிறுநீரை சுத்தமான நீராக மாற்றி விடும். பின்னர், அவை மேகங்களாக மாறி இன்னும் சுத்தமான மழை நீராக அதே அணுக்களுடன் திரும்ப கீழே வரும்.
டைனோசர் காலத்தில் இருந்த இந்த தண்ணீர் அணுக்கள் அழியாமல் எப்படி இன்று வரை உள்ளது...?
ஏனெனில், மரங்கள், உயிரினங்கள் வயதாகி இறப்பது போல் அணுக்களுக்கு ஏற்படாது. அவை எப்போதும் உயிருடன் இருக்கும்.
ஆக, டைனோசர் சிறுநீராக கழித்த தண்ணீர் அன்று வாழ்ந்த உயிரினங்களுக்கும் அதற்கு பின்னர் தோன்றிய உயிரினங்களுக்கும் குடிநீராக அமைந்தது. பின்னர் இந்த கோடிக்கணக்கான உயிரினங்கள் கழித்த சிறுநீர் தான் இன்றும் சுழற்சி என்ற முறையில் மழையாக மாறி நமக்கு குடிநீராக வருகிறது.
நீங்கள் இப்போது ஒரு கப் தண்ணீர் குடித்தால், அதில் சிறிதளவு டைனோசர்கள் குடித்த அதே (Exactly) மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது 100% அறிவியல் பூர்வமான உண்மை.
இந்த 150 மில்லியன் ஆண்டுகளாக (அதற்கு முன்னர் கூட) பல கோடி உயிரினங்களுக்குள் சென்று வந்த அதே தண்ணீர், அதவாது பல டிரில்லியன் முறை அசுத்தமான அதே தண்ணீர் தான் இன்றும் நமக்கு சுத்தமான குடிநீராக கிடைக்கிறது.
ஆக, இப்படி ஒரு பிரமாண்டமான, அபாரமான சுத்திகரிப்பு ஆற்றலை கொண்டுள்ள இந்த இயற்கையை நாம் எப்படி வியந்து புகழாமல் இருக்க முடியும்...???
நன்றி: Praksam P Palani.