🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புதிய பொறுப்புகளை அலங்கரிக்கும் இளந்தலைவர்கள்!

ஆளும்கட்சியான திமுகவில் பிரதான துணை அமைப்புகளில் ஒன்றான மாணவரணியில் பொறுப்பாளர்கள் நியமனம் வேகமெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இராஜகம்பள சமுதாய இளைஞர்கள் குறுப்பிடத்தக்க அளவில் இடம்பிடித்து வருகின்றனர். இதன் விவரம் வருமாறு,

பவளவிழா கண்ட ஆளும்கட்சியான திமுகவில் பிரதான அமைப்பு தவிர 20-க்கும் மேற்பட்ட சார்பு அணிகள் உள்ளன. ஏற்கனவே இளைஞரணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, அயலக அணி, தகவல் தொழில்நுட்ப அணி என்று 23 சார்பு அணிகள் இருந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மாற்றுத்திரணாளிகள் அணி மற்றும் கல்வியாளர்கள் அணி என்று கூடுதலாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 25 சார்பு அணிகளாக உயர்த்தப்பட்டது.

இன்றைய முதல்வர் கட்சிக்குள் அடியெடுத்து வைத்தபோது 1980 களில் இளைஞரணி முக்கியத்துவம் பெற்றது. அதையடுத்து கனிமொழி அவர்களின் வருகை கலை, இலக்கிய, பகுத்தறிவுப்பேரவை வலிமை பெற்றது. தற்போது துணைமுதல்வர் உதநிதியின் வருகைக்குப்பின் அவர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்தாலும், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில்  மாணவரணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இளந்தலைமுறையினரை கட்சிக்குள் சேர்க்கும் வேலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் 90 சதவீத மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஓய்வளிக்கப்படும் என்றே தெரிகிறது.


அந்தவகையில்  அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் மாணவரணி பொறுப்பாளர்கள் நியமனத்தில் இராஜகம்பள சமுதாயத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் பொறுப்புகளை கைப்பற்றி வருகின்றனர். குறிப்பாக இளம் பெண்களும் மாணவரணியில் பொறுப்புகளைப் பெற்றுவருவது எதிர்கால அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.  கோவை மாவட்டம் மதுக்கரை கிழக்கு மாணவரணி துணை அமைப்பாளராக மாச்சேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த ஜி.சுமித்ரா B.Com CA நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுக்கரை ஒன்றியக்குழு மு.உறுப்பினர் க.மாசிலமணி அவர்களின் அண்ணன் மகள் என்பதும், திமுக பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் எம்.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் திருமதி ஜெயராணி முருகேசன் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர், தந்தையார் முருகேசன் திமுகவில் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

திமுக மாணவரணியில் புதிய பொறுப்புகளை அலங்கரிக்கும் இராஜகம்பளத்து சொந்தங்கள் அரசியலில் மேலும் மேலும் உயர வாழ்த்துவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved