கயத்தாறு வருகைதரும் தமிழக முதல்வரை வரவேற்க ஏற்பாடுகள் தடால் - புடால்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் வரும் ஜனவரி'03 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்காக 03-ஆம் தேதி தூத்துக்குடி வருகைதரும் தமிழக முதல்வர், அன்று காலை 8 மணியளவில் கயத்தாறிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது.
மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளில் இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்கள் நேரடியாக கயத்தாறு வருகை தந்து மரியாதை செய்ததில்லை என்றிருந்த நிலையில், முதல்முறையாக முதல்வராக இருக்கும் ஒருவர் வருகை தருவது, கம்பளத்தார் சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது குறித்து இன்று காலை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர்.ராஜூ அவர்களின் இல்லத்தில் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், புதூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.சுசிலா தனஞ்செயன், மாவட்டக்குழு உறுப்பினர் திரு.ஞானகுருசாமி, த.வீ.க.ப.கழக மாநிலத்தலைவர் திரு.சங்கரவேலு, மாவட்டத்தலைவர் வலசை திரு.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்தின் கோரிக்கைகளை மாநிலத்தலைவர் திரு.சங்கரவேலு விளக்கமாக அமைச்சரிடம் எடுத்துரைத்தார். கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னனி தலைவர்களுக்கு கட்டபொம்மன் டிசன்டென்ட் டிரஸ்ட் சார்பாக திரு.மாரிச்சாமி அவர்கள் தினசரி நாள்காட்டியை வழங்கினார்.